ரஷ்ய தடுப்பூசி ஸ்பூட்னிக்-வி-ஐ இப்போது கோவின் செயலியில் முன்பதிவு செய்துகொள்ளலாம். முன்னதாக, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகள் மட்டும் செலுத்தப்பட்டு வந்தன.
ஸ்பட்னிக்-வி (Sputnik V) தடுப்பூசிக்காக டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகம் அப்பல்லோ மருத்துவமனையுடன் இணைந்துள்ளது. ஹைதராபாத்தின் ஜூபிலி ஹில்ஸில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஸ்பூட்னிக் வி தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதன் பின்னர், ரஷ்ய தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி-யின் ஊசி செலுத்தல் விசாகப்பட்டினம், டெல்லி, மும்பை, பெங்களூர், அகமதாபாத், சென்னை, கொல்கத்தா மற்றும் புனே ஆகிய இடங்களில் நடக்கும்.
ரஷ்ய தடுப்பூசி (Vaccine) ஸ்பூட்னிக்-வி ஒரு டோஸ் அப்பல்லோ மருத்துவமனையில் ரூ.1250 க்கு வழங்கப்படுகிறது. இதில் மருத்துவமனையின் செலவும் அடங்கும். டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகம் இது குறித்த தகவல் அளித்தபோது, ஸ்பூட்னிக் வி-யின் விலை ரூ.948 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதகாவும், அதில் 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்றும் கூறியது. இதன் பின்னர், தடுப்பூசியின் விலை ரூ.995.4 ஆக இருக்கும் என்றது ரெட்டீஸ் நிறுவனம். இதற்குப் பிறகு, மருத்துவமனை செலவுகளைச் சேர்த்த பிறகு, தடுப்பூசியின் விலை ரூ.1250 ஆக இருக்கும்.
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்பூட்னிக்-வி-யின் முதல் தொகுப்பு (சுமார் 1.5 மில்லியன் டோஸ்) மே 1 அன்று இந்தியாவை அடைந்தது. கடந்த வாரம் தடுப்பூசி விலையை வெளியிட்ட டாக்டர் ரெட்டீஸ் ஆய்வகம், மே 13 அன்று கசவுலி மத்திய மருந்து ஒழுங்குமுறை நிறுவனத்தால் இந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று கூறியது.













