காது அடைப்பு நீங்க வீட்டு வைத்தியம்!

SOCIAL SHARE
Pin It

வெளிக்காது. நடுக்காது. உட்காது என்று மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. காது வலிக்கு காரணங்கள் பல உண்டு. சைனஸ், நோய்த்தொற்று, காது குழாய், டான்சில் சதை வளர்ச்சி, கழுத்தெழும்பு தேய்மானம், வாய்ப்புண்கள், நாக்கில் உண்டாகும் புண், பற்சொத்தை கடைவாய்ப்பல் வலி போன்ற காரணங்களால் காதுவலி உண்டாகக்கூடும். அதோடு காதில் அழற்சி, புண், சீழ், இரைச்சல் போன்ற கோளாறுகளையும் உண்டாக்குகின்றன. 

பூண்டு இருந்தாலே போதும் பெரும்பாலான வைத்தியங்களை செய்துவிடலாம் என்று சொல்வார்கள் பெரியவர்கள். வெள்ளை பூண்டை நாட்டு பூண்டை ( ரோஸ் நிறத்தில் இருக்கும்) எடுத்து நசுக்கி சாறை எடுக்கவும்.

இரண்டு சொட்டு சாறை எடுத்து எந்த காதில் வலி இருக்கிறதோ அந்த காதில் உள்ளே போகும் படி சாறு விடவேண்டும். அரைமணி நேரம் அசைக்காமல் இருந்தால் வலி படிப்படியாக குறையும்.

காதில் கும்மென்று அடைப்பு, அல்லது இரைச்சல் சத்தம் போன்று இருந்தால் பூண்டு சாறை காட்டிலும் இவை பலன் கொடுக்கும். வெள்ளை பூண்டை பெரிய பல்லாக இருக்கும் படி எடுத்து, வலி இருக்கு காதுபகுதியில் பஞ்சு போன்று அடைத்து வைக்கவும். உள்ளே செல்லாமல் இருக்கும் படி கவனமாக வைக்கவேண்டும். 30 நிமிடங்கள் கழித்து அதை வெளியே எடுத்தால் சத்தம் குறைந்திருக்கும். அடைப்பு நீங்கியிருக்கும்.

கடுகு எண்ணெயில் பூண்டு, கிராம்பு இரண்டையும் நசுக்கி சேர்த்து சிறிய வாணலியில் கலந்து சூடேற்றவும். எண்ணெயில் கிராம்பும் பூண்டும் கருப்பு நிறமாகும் வரை அதை சூடேற்றவும். பிறகு அதை இறக்கி குளிரவைத்து நன்றாக ஆறியதும் சில துளிகள் எடுத்து காதை சுற்றி நன்றாக தடவி கொள்ளவும். அதிலிருந்து இரண்டு துளிகள் எடுத்து காதுக்குள் விடவேண்டும்.

சைனஸ் பிரச்சனையால் காதுக்குள் வலி இருப்பவர்கள் நீண்ட நாள் வலி உபாதை அனுபவிப்பவதுண்டு. இவர்கள் தொடர்ந்து இந்த எண்ணெயை தடவினால் காதுவலிக்கு நல்லா நிவாரணம் கிடைக்கும்.

திருநீற்று பச்சிலை என்னும் மூலிகை ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் பயன்படுத்தியவர்கள் நம் முன்னோர்கள். திருநீற்றுபச்சிலையுடன் கல் உப்பு சேர்த்து செய்யும் வைத்தியம் காதுவலியோடு காது உள்ளே இருக்கும் சீழையும் வெளியேற்றகூடியது.

திருநீற்று பச்சிலையை நீர் விடாமல் அரைத்து அதன் சாறை எடுத்து இரண்டு அல்லது மூன்று துளிகள் விட்டால் காதுவலி நிச்சயமாக குறையும். சிறு பிள்ளைகளுக்கு வைக்கும் போது கல் உப்பு வெறும் வாணலியில் சில நிமிடங்கள் வறுத்து அதனுடன் திருநீற்றுப்பச்சிலை சேர்த்து விழுதாக மைய அரைக்கவும்.

இந்த விழுதை காதை சுற்றிலும் இளஞ்சூடாக இருக்கும் போது போட வேண்டும். இந்த பற்று போடுவதால் உப்பு காதில் உள்ளே இருக்கும் சீழ் வெளியேற்றுகிறது. காதுக்குள் இருக்கும் வீக்கத்தை கட்டுப்படுத்துகிறது. திருநீற்று பச்சிலை சாறை காதினுள் விடலாம். ஆனால் உப்பு நீரை காதில் விடக்கூடாது.

ARUNACHALAM