உலகிலேயே அதிக எடையுள்ள பழங்களை தரவல்லது பலாமரம். ஒரு கிலோவிலிருந்து நூறு கிலோவிற்கு மேலான எடையுள்ள பழங்களை கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி பகுதியில் விளைகின்றது. நட்ட 3 ஆண்டுகள் முதல் 300 ஆண்டுகளுக்கு மேல் பலன் தரும். ஒரு வளர்ந்த பெரிய மரம் 750 பழங்களுக்கு மேலாக காய்க்கும் திறன் கொண்டதாக உள்ளது. முதிர்ந்த ஒரு மரம் சுற்றளவினை பொறுத்து. அதிகபட்சமாக இரண்டு லட்சம் ரூபாய் வரை விலையாகிறது. பலா, பஞ்சு நிலையிலும், முற்றாத நிலையிலும், கறி உணவாகவும், முற்றிய பின் பழமாகவும், கொட்டை உணவுப் பண்டங்களை தயாரிக்கவும் உதவுகிறது. சுவையான பலாச்சுளையை சாப்பிட ஆரம்பித்தால் நம்மை அறியாமலே அரை கிலோ (10) சுளைவிற்கு மேல் சாப்பிடத் தூண்டும்.
ஏழைகளில் உணவாகிறது பிற பழங்களை விட பன்மடங்கு சத்துக்கள் செறிந்தது. நூற்றுக்கும் மேலான உணவுப் பண்டங்கள் செய்திட ஆதாரமாக உள்ளது. பலா, அல்வா, சிப்ஸ், ஐஸ்கிரீம், வற்றல்கள், ஊறுகாய், பழவற்றல், வருவல்கள், பழச்சாறு, பலாமிட்டாய், பலா புட்டு, பலா பாயாசம், பலா ஒயின், பலா பொறியல், பலா கொழுக்கட்டை எனும் இனிப்பு பண்டம் என பல நூறாகிறது. பலாப் பழத்தினை
இனிப்புக்காகவும், நிறத்திற்காகவும், வாசனைக்காகவும், தகுந்த அளவில் சேர்த்து செயற்கை வாசனைப் பொருட்கள் செய்யவும் பயன்படுக்கிறது.
பலாவின் புரதம், கொழுப்பு, மாவுச் சத்துடன், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் எச், செறிந்ததாக உள்ளது. இது பல்வேறு உடல் உபாதைகளுக்கு பாதுகாப்பு அரணாக உள்ளது. பலா தொழில் முனைவோருக்கு பிரகாசமான வாய்ப்பினையும், தரக்கூடியது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு தரும், உணவுப் பாதுகாப்பு தரும். இயற்கை இடர்பாடுகளை தாங்கி வளரும், ஏழைகளின் பாதுகாவலன், பலா என்றால் மிகையாகாது.
தமிழ்நாட்டில் பலா , பாலூர் 1, பாலூர் 2, பர்லியார் 1, பேச்சிப்பாறை 1, சிங்கப்பூர் பலா , அவற்றுள் , பலூர் 1, பர்லியார் 1, பேச்சிப்பாறை1 மற்றும் சிங்கப்பூர் பலா ஆண்டிற்கு அதிக மகசூல் தருவதிலும் அதிக லாபம் தருவதிலும். சத்து செறிந்த பழங்களை தருவதிலும், விலை மதிப்புள்ள மற்றும் அறுவடை மிகுந்த சந்தை வாய்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, எழைகளின் உணவு ஆதாரமாக இருப்பதிலும், பலா மரத்திற்கு ஈடு இணை ஏதும் இல்லை என்பது வெளிச்சம்.
பலாப்பழம் மார்ச் மாதம் முதல் ஜீன் மாதம் வரை அதிக அளவில் அறுவடை தரும் பருவம். பின் பருவ அறுவடை ஆகஸ்டு வரை நீடிக்கும். தற்போது ஆண்டுக்கு இரண்டு முறை காய்த்து பலன் தரக்கூடிய ரகங்கள் சாகுபடியில் உள்ளது. பண்ருட்டி பகுதியில் சில மரங்கள் பருவத்திற்கு முன்னதாகவே காய்க்கும் குணாதியங்களை கொண்டுள்ளது. சில மரங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை ஆகஸ்டு மாதங்களில் தான் முற்றிய காய்களைத் தரும் குணத்தை கொண்டு உள்ளது. இவ்வாறு ஒரு தோப்பில்
ஏதாவது ஒரு மரத்தில் பிஞ்சு, காய் என ஆண்டு முழுவதும் பலாக்காய் கிடைப்பதை காண்கிறோம்
பலாப்பழம் ஆண்டு முழுவதும் கிடைக்கச் செய்திடும் வகையில் ஆகஸ்டு செப்டம்பர் மாதங்களில் முற்றிய பழங்களைத் தரும். பின் பருவ வெளிவர வேண்டும் அதற்கான ஆராய்ச்சிகளை அரசு முன்னெடுக்க வேண்டும்.













