நமக்கு தண்டுக்கீரையை பற்றி நிறையவே தெரிந்திருக்கும். ஆனால் தண்டுக் கீரை விதைகள் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா. இது பார்ப்பதற்கு வெள்ளை நிறத்தில் தானியங்கள் போன்று காணப்படும். இதை அமர்நாத் என்று அழைக்கின்றனர். ஏராளமான ஊட்டச்சத்துக்களையும் நன்மைகளையும் உள்ளடக்கியது தான் இந்த தண்டுக் கீரை விதைகள். இதில் அதிக புரதச்சத்துக்கள் காணப்படுகிறது. இது அன்றாட நோய்களுக்கு தீர்வளிக்க உதவுகிறது.
அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் என பல சத்துக்கள் காணப்படுகிறது. இதில் அதிகப்படியான நார்ச்சத்துக்கள் இருப்பது நம் செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது. இது கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்த உதவுகிறது. இது இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்த வழி வகுக்கிறது.
இந்த தானியம் உங்க கூந்தலை வலிமைப்படுத்தி கூந்தல் உதிராமல் காக்க உதவுகிறது. இந்த தானியத்தை கடைந்து பாலெடுக்கும் பாலில் அதிகமான அளவு கால்சியம் காணப்படுகிறது. எனவே இது எலும்பு ஆரோக்கியத்திற்கு சிறந்தது. இந்த தானியத்தில் உள்ள விட்டமின் சி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், விட்டமின் ஏ கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இது போக இந்த தானியம் எடை இழப்புக்கு உதவுதல், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துதல், தசை வளர்ச்சியை அதிகரித்தல், செலியாக் நோயைத் தடுப்பது போன்ற பல நோய்களுக்கு தீர்வளிக்கிறது.
அமர்நாத் தானியம் இந்தியாவில் பழமையாக சாகுபடி செய்யப்பட்ட தானியம் ஆகும். இதன் தோற்றம் 8000 ஆண்களுக்கு முன்பு இருந்தே காணப்படுகிறது. இந்த தானியம் ஊட்டச்சத்துக்களின் வளமான ஆதாரமாகும். அமராந்த் தாவரத்தின் தானியங்கள், இலைகள் மற்றும் தாவரங்களின் பிற பாகங்கள் என அனைத்தும் நம் உடலுக்கு நன்மை பயக்கும்.1970 களில் இந்த ஆலை மீண்டும் சாகுபடிக்கு கொண்டு வரப்பட்டது. 100 கிராமுக்கு அமராந்தின் ஊட்டச்சத்து மதிப்பு அமரந்த் தானியத்தில் பல வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் புரதத்தின் சிறந்த மூலங்களாக உள்ளன.
அமராந்த் தானியங்களின் ஊட்டச்சத்து மதிப்புகளின் படி இதில் நார்ச்சத்துக்கள் அதிகளவில் இருப்பது நம் செரிமான அமைப்புக்கு நன்மை பயக்கும். இது இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது. வீக்கம், மலச்சிக்கல், தசைப்பிடிப்பு மற்றும் பல நோய்களிலிருந்து பாதுகாக்க அமராந்த் தானியம் உதவுகிறது. இந்த உணவில் உள்ள நார்ச்சத்துகள் இரைப்பை புண்கள் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் போன்ற கடுமையான நிலைமைகளிலிருந்து பாதுகாக்க உதவுகிறது இது உடலில் ஊட்டச்சத்துக்களை அதிகரிக்கும் திறனை கொண்டுள்ளது. ஊட்டச்சத்துக்களை உடம்பு நன்றாக உறிஞ்ச உதவுகிறது.
அமர்நாத் தானியத்தில் அதிகளவு லைசின் என்பது காணப்படுகிறது. அமர்நாத் தானியத்தில் முழுமையான புரதம் காணப்படுகிறது. இவையிரண்டும் நம் உடல் மெட்டா பாலிசத்தை மேம்படுத்த உதவுகிறது. லைசின் உடலுக்கு ஒரு முக்கியமான அமினோ புரதம் ஆகும். இது உடலில் பயன்படுத்தக்கூடிய புரதங்களை உருவாக்குவதில் மிகவும் நன்மை பயக்கிறது. இது மேம்பட்ட வளர்சிதை மாற்றத்தையும் உடலில் முழுமையான வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது.
அமர்நாத் தானியத்தில் பொட்டாசியம் அதிகளவு இருப்பது இரத்த நாளங்கள் தளர்வாக இருப்பதை உறுதி செய்கிறது. இது இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. பொட்டாசியத்தின் வாசோடைலேஷன் பண்புகள் இரத்த நாளங்கள் மற்றும் தமனிகள் மீதான அழுத்தத்தை குறைக்கிறது. இது இதய நோய் களுக்கான வாய்ப்பை குறைக்கிறது.
விட்டமின் சி அடங்கிய அமர்நாத் தானியங்கள் நம்முடைய நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது. இது நோயெதிர்ப்பு சக்திக்கு காரணமான இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. உடலில் கொலாஜன் உற்பத்தி செய்வதில் அதன் பங்களிப்பை தருகிறது. வைட்டமின் சி செல்களை சரிசெய்வதற்கும், விரைவாக குணப்படுத்துவதற்கும் நன்மை பயக்கும்.
இந்த தானியத்தில் விட்டமின் ஏ சத்து காணப்படுவதால் கண் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. இதில் பீட்டா கரோட்டீன் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்கள் இருப்பதால் கண் புரையை தடுக்க உதவுகிறது. கண்களில் ஏற்படும் மாகுலர் சிதைவை கொடுக்கிறது.













