ஆஸ்திரேியாவுக்குச் சென்றுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவல் இருப்பதால், இரு அணி வீரர்களும் பயோ-பபுள் பாதுகாப்பில் இருக்கின்றனர். இதனால் அணியின் குழுவைத் தவிர வெளியே தனியாக எங்கும் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பயோபபுள் சூழலை மீறி எங்காவது சென்றுவிட்டால், அணிக்குள் கொரோனா பரவல் தொற்று ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், வீரர்கள் தங்கி இருக்கும் ஹோட்டலுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் புத்தாண்டு தினத்தன்று இந்திய வீரர்கள் ரோஹித் சர்மா, ரிஷப்பந்த், பிரித்விஷா, நவ்தீப் ஷைனி, ஷூப்மான் கில் ஆகிய 5 பேர் பயோ பபுள் சூழலை மீறி ஒரு ஹோட்டலுக்குச் சென்று உணவு சாப்பிட்டு புத்தாண்டைக் கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையால் ரோகித் சர்மா, ஷிப்மன் கில், ரிஷப் பந்த், பிருத்வி ஷா, நவ்தீப் சைனி ஆகிய வீரர்கள் தனிமைப்படுத்தி நடவடிக்கை மேற்கூள்ளப்பட்டுள்ளது. கொரோனா விதிகளை மீறிய 5 வீரர்கள் குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா, பிசிசிஐ விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையே ஜன.7-ம் தேதி ஆஸி. அணியுடன் 3-வது கிரிக்கெட் டெஸ்டில் இந்திய அணி விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.













