குழந்தை பிறப்பு முதல் வயதானவர்கள் வரை தற்போது நாப்கின்களை பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.
குழந்தைகள் பிறந்தவுடனேயே டயாபர் மாட்டி விடுவதால் குழங்களைகளுக்கு சரும அலர்ஜி, புண் உள்ளிட்ட உபாதைகள் ஏற்படுகின்றன.
பெரியவர்களுக்கு இயற்கை உபாதையை அடக்க முடியாததால் அவர்களும் டயாபரை பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.
பெண்கள் மாதவிடாய் காலத்தில் சானிட்டரை நாப்கின்கள் பயன்படுத்துகின்றனர். இவை அனைத்தும் உடம்புக்கு கேடாய் முடிவதோடு மண்ணுக்கும் கேடாய் முடிவடைகிறது.
ஒரு குழந்தை பூப்பெய்தது முதல், 'மெனோபாஸ்' எனப்படும் நிரந்தர மாதவிடாய் விலக்கு காலத்தை அடையும் வரை, 120 கிலோ சானிட்டரி நாப்கின்கள் போன்ற பொருட்களை பயன்படுத்துகிறார். அந்த பொருட்கள் மண்ணில் மக்க, நுாற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகும். அப்படியொரு ஆபத்து இருக்கிறது என்பதை அறியாமலேயே நம் பெண்கள், விதவிதமான ரசாயன பொருட்களால் ஆன சானிட்டரி நாப்கின்கள் மற்றும் பேடுகளை அணிகின்றனர். அவற்றில் இருக்கும் ரசாயன பொருட்கள் மற்றும் செயற்கை மணமூட்டிகள், உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பவை.உடனடியாக அவை தெரியாவிட்டாலும், கண்டிப்பாக தீங்கிழைப்பவை. அதற்கு மாற்றாக மீண்டும் சலவை செய்து, சுத்தப்படுத்தி பயன்படுத்தத் தக்க, முழுதும் இயற்கை மற்றும் மறுசுழற்சி பொருட்களால் ஆன, சானிட்டரி நாப்கின்கள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன. இந்த நாப்கினை பயன்படுத்தி, அதை அவிழ்த்து, எங்களின் விசேஷமான உறையில் வைத்து, பையில் எடுத்து வைத்து, வீட்டுக்கு கொண்டு வந்து விடலாம்.அதன் பின், அதை சுத்தப்படுத்தி, உலர வைத்து, மீண்டும் அணிந்து கொள்ளலாம். அந்த சானிட்டரி நாப்கின் மற்றும் பேடில் இருப்பது, உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்காத, நல்ல தரமான பருத்தியால் ஆன பொருட்கள். அதுபோல, பயன்படுத்தியவற்றை வைத்து எடுத்து வர பயன்படுத்தும் உறையும், மிகவும் தடிமனானது; வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அதை அதிகபட்சம், ஒரு சில ஆண்டுகள் பயன்படுத்தலாம். அதன்பின், அதற்கென உள்ள விசேஷமான உறையில் வைத்து, குப்பை தொட்டியில் போட்டு விட வேண்டும்.
குப்பை அள்ளுபவர்கள் மற்றும் அவற்றை கையாளுபவர்கள் எளிதாக அவற்றை கண்டறியும் வகையில், சிகப்பு நிற பொட்டு போன்ற வடிவத்தை பெரியதாக அந்த உறையில் அச்சடித்துள்ளோம்.இதனால் பிற குப்பையிலிருந்து, அந்த குப்பையை தனித்து அகற்றி, பாதுகாப்பாக அழிக்க முடியும்.
இதேபோல் சிலிக்கானால் ஆன 'சானிட்டரி கப்'பும் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை திரும்பத் திரும்ப பயன்படுத்திக் கொள்ளலாம்!













