அகம் குளிர் அகத்திக் கீரை

SOCIAL SHARE
Pin It

அகத்திக் கீரை குளிர்ச்சி தரும் இயல்புடையது. உடலின் உள்ள அனைத்து விதமான ‘விஷங்களையும்’ முறிக்கக் கூடியது. அகம்+ தீ = அகத்தீ. உடலின் அதிகப்படியான பித்தத்தைக் குறைக்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். உணவில் கலந்து கொடுக்கப்படும் விஷப்பொருள்களை முறிக்கும். அதிகளவு சாப்பிட்டால் வாயுப் பிரச்சனை உருவாகும்.

அகத்திக் கீரையின் தன்மை விஷநாசினி, குளிர்ச்சி உண்டாக்கி, மலமிளக்கி, புழு அகற்றி அகத்தில் உள்ள உஷ்ணத்தை குறைக்கும் அகத்திக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவும். ஆனால், தினமும் சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிட்டால் அரிப்புடன் கூடிய புண் மற்றும் வாயு அதிகமாகிவிடும். அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் இந்தக் கீரையை குறைவாகச் சாப்பிட வேண்டும். விஷங்களை மட்டுமல்லாமல், மருந்துகளையும் முறிக்கும் குணம் உள்ள அகத்திக் கீரையை, மருந்து எடுத்துக் கொள்ளும் காலங்களில் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.

அகத்திக் கீரையின் மருத்துவப் பயன்கள்  அகத்திக் கீரையுடன் சம அளவு தேங்காய் சேர்த்து அரைத்து சாறு எடுத்து, அதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து, கரும்படை, தேமல், சொறி, சிரங்கு போன்றவற்றின் மீது பற்றுப்போட்டால் பூரண குணம் கிடைக்கும். அகத்திக் கீரை சாற்றில் (200 மி.லி) 50 கிராம் அதிமதுரத்தை பால் சேர்த்து அரைத்து, அத்துடன் நல்லெண்ணெய் (250 மி.லி) சேர்த்து, நன்கு கொதிக்க வைத்து தைலபதத்தில் இறக்கவும். இதைத் தினமும் அதிகாலையில் 5 மி.லி.(1ஸ்பூன்) அளவுக்கு சாப்பிட்டால் வாய்ப்புண், வயிற்றுப்புண், நாக்குப்புண், தொண்டைப்புண் குணமாகும். உதடு வெடிப்புக்கும் நிவாரணம் கிடைக்கும்.

அகத்திக் கீரைச் சாற்றில் கடல் சங்கை இழைத்து மருக்கள் மீது தடவினால் அவை உதிர்ந்து விழுந்துவிடும். அகத்திக் கீரை, மருதாணி இலை, மஞ்சள் மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்துத் தடவினால், கால்களில் ஏற்படும் பித்த வெடிப்புகள் குணமாகும். அகத்திக் கீரையை அரைத்து உச்சந்தலையில் ஒரு மணி நேரம் வைத்திருந்து குளித்தால் உடல் உஷ்ணம் குறையும்.
இளநரை ஏற்படுவதையும் தடுக்கும்.
 
அகத்திக் கீரை, ஊறவைத்த வெந்தயம் இரண்டையும் சேர்த்து அரைத்து, அடைதட்டிக் காய வைக்கவும். பிறகு, அதை நல்லெண்ணெய்யில் சுடுவது போல் சுட்டு எடுத்து விட்டு, எண்ணெய்யை பத்திரப்படுத்தி வைத்து, தினமும் அதை உடலில் தடவிக் குளித்தால் உடல் மிணுமிணுக்கும், கண்களுக்கும் குளிர்ச்சி உண்டாக்கும். அகத்திக் கீரைச் சாற்றில், ஐந்து கடுக்காய்களை உடைத்துப் போட்டு கஷாயம் தயாரித்து, அதை வாய் அகன்ற பாத்திரத்தில் ஊற்றி சுமார் அரை மணி நேரம் ஆசனக் குளியல் செய்தால், மூலக்கிருமிகள், மூல எரிச்சல், மூலச் சூடு, இரத்த மூலம் போன்றவை முழுமையாகக் குணமாகும்.

அகத்திக் கீரைச் சாற்றில், ஐந்து கடுக்காய்களை உடைத்துப் போட்டு கஷாயம் தயாரித்து, அதை வாய் அகன்ற பாத்திரத்தில் ஊற்றி சுமார் அரை மணி நேரம் ஆசனக் குளியல் செய்தால், மூலக்கிருமிகள், மூல எரிச்சல், மூலச் சூடு, இரத்த மூலம் போன்றவை முழுமையாகக் குணமாகும். அகத்திக் கீரைச் சாற்றில் சிறிது உப்பு சேர்த்துக் குடித்தால் வாந்தி ஏற்பட்டு பித்த நீர் வெளியாகும். இதனால், உடலில் இருக்கும் அதிகப்படியான பித்தம் குறையும்.

அகத்திக் கீரையை அரைத்து ஆறாத, நாள்பட்ட உடல் காயங்கள் மீது தடவினால், அவை விரைவில் ஆறும். அகத்திக்கீரை சாற்றை மூக்கில் பிழிந்து விட்டால் அடிக்கடி உண்டாகும் காய்ச்சல் குணமாகும்.

அகத்திக் கீரை சில நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கின்றது. ஆனால் இவற்றை வீட்டில் அகத்திக் கீரைப் பொடி செய்வது  எப்படி என்று பார்களாம்.

நிழலில் உலர்த்திய அகத்திக் கீரை  அரை கிலோ, மிளகு 20 கிராம், சீரகம் 20 கிராம், மஞ்சள் 10 கிராம்.

மேற்கண்ட அனைத்துப் பொருள்களையும் ஒன்றாகக் கலந்து அரைத்துப் கொள்ளவும். இதில், தினமும் காலை  இரு வேளையும் 5 கிராம் (1 ஸ்பூன் ) அளவில் சாப்பிட்டால், உடல் சூடு, ஜீரணக் கோளாறுகள், கண் நோய்கள், பித்த நோய்கள் போன்ற அனைத்தும் விலகும்.
 

ARUNACHALAM