ஜூன் மாதத்திற்கு பிறகு இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் வேலை செய்யாது

SOCIAL SHARE
Pin It

1996 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் என்கிற பிரவுசரை உருவாக்கியது. இணையவாசிகளிடம் முதன்முதலில் மிகவும் புகழ்பெற்றது இந்த பிரவுசர். உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்ட பிரவுசர்களில் இன்டர்நெட் எக்ஸ்பிளோரர்தான் முதலிடம் பெற்றது.

இதில் தனியார் நிறுவனங்கள் பல விளம்பரங்கள் அளித்து தங்களது பொருட்களை விளம்பரப்படுத்தின. ஆன்லைன் வர்த்தகமும் முதன்முதலில் செழிப்படைந்தது இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் மூலமாகத்தான். இதனை அடுத்து கூகுள் குரோம், மொசில்லா பயர்பாக்ஸ், எம்.எஸ்.என், யூசி ப்ரவுசர், ஒபேரா மினி உள்ளிட்ட பல பிரவுசர்கள் உருவாகின.

இதனையடுத்து இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் பயன்படுத்துபவர்களது எண்ணிக்கை குறைந்தது. நாளடைவில் 1985ம் ஆண்டுக்குமேல் பிறந்தவர்கள் பயன்படுத்தும் பழைய பிரவுசராக இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் கருதப்பட்டது. தற்போது உலகம் முழுவதும் கூகுள் குரோம் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கணினி மொழி புரியாதவர்களுக்குக்கூட எளிதில் அவற்றைக் கற்பிக்கும் வகையில் எளிதாக வடிவமைக்கப்பட்டிருந்தது கூகுள் நிறுவனத்தின் குரோம். இதற்காகவே பலர் கூகுள் குரோம்-ஐ பயன்படுத்தி தேடலில் ஈடுபட்டனர். இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கடந்த 26 ஆண்டுகளாக தாங்கள் உருவாக்கிய பிரவுசரான இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம்வரை இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் செயல்படும். அதன்பின்னர் நிரந்தரமாக முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயத்தில் இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் சார்ந்த செயலிகள் மற்றும் இணையதளங்கள் 2029ஆம் ஆண்டுவரை செயல்பாட்டில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

 கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் Outlook, OneDrive and Office 365 போன்ற பியூச்சர்கள் 2021 ஆகஸ்ட் மாதம் முதல் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதமே மைக்ரோசாப்ட் வெப்-ன் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன. முதல் வெப் பிரவுசராக அறிமுகமான இன்டர்நெட் எகஸ்புளோரர், உலகம் முழுவதும் கோலோச்சியது. புதிய பிரவுசர்களின் வருகையால் இதன் சேவை மெல்ல மெல்ல சரிவை சந்தித்து.

கடந்த சில ஆண்டுகளாக இறுதியின் விளிம்பில் இருந்த இந்த சேவை தற்போது முற்றிலுமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பயனர்களின் தேவை மற்றும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய தவறியதால் மைக்ரோசாப்ட்டின் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பெரும் சரிவை சந்திக்க காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர். உடனடி அப்டேட் மற்றும் டவுன்லோடு வேகம் ஆகியவை சரி செய்யப்பட்டிருக்க வேண்டும் எனவும் டெக் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தாலும், உலகளவில் முன்னணி பிரவுசராக கூகுள் வளர்ந்துள்ளது.
 
 

ARUNACHALAM