இன்ஸ்ட்ராகிராம், பேஸ்புக், டிவிட்டர் முடக்கப்படுமா?

SOCIAL SHARE
Pin It

சமூக ஊடக நிறுவனங்கள் தொடர்பான புதிய விதிகள்  மே 26, 2021 முதல் நடைமுறைக்கு வருகின்றன. சமூக ஊடக நிறுவனங்கள் இந்திய சட்டங்களுக்கு இணங்கவில்லை என்றால், அவற்றுக்கு சிக்கல் ஏற்படலாம்.

புதிய விதிகளை பின்பற்றி செயல்படாத சமூக ஊடக நிறுவனங்கள் தங்களுடைய பாதுகாப்பை இழக்க நேரிடும். விதிகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது இந்திய சட்டப்படி குற்றவியல் நடவடிக்கைகளும் எடுக்கப்படலாம்.

மூன்று மாதங்களுக்கு முன்பு, மத்திய அரசு சமூக ஊடகங்களுக்கான விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டது. மே மாதம் 26ஆம் தேதி முதல் அவை நடைமுறைக்கு வரும். அதற்கு முன்னதாகவே அரசின் புதிய விதிகளை பின்பற்றுமாறு பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் பிற நிறுவனங்களையும் மத்திய அரசு கேட்டுக்கொண்டது.

இருப்பினும், கூ (Koo) தவிர உயர் சமூக ஊடக நிறுவனங்கள் எதுவும் அரசின் புதிய விதிகளை பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது. அரசாங்க வழிகாட்டுதல்களை இந்த சமூக ஊடக நிறுவனங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையா அல்லது இந்திய அரசின் விதிமுறைகளை பின்பற்றத் தயாராக இல்லையா என்ற தீவிரமான கேள்வியை இது எழுப்புகிறது.

புதிய விதிகளை நடைமுறைப்படுத்த ஆறு மாதங்கள் வரை கால அவசகாசம் கோருவது உள்ளிட்ட பல கோரிக்கைகளுடன் சமூக ஊடக நிறுவனங்கள் மத்திய அரசை அணுகுவதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. சில நிறுவனங்கள் வெளிநாடுகளில் உள்ள தங்கள்   தலைமையகத்தின் அறிவுறுத்தலுக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளன.

 

ARUNACHALAM