கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்க நாம் முகக்கவசங்களை பயன்படுத்துகிறோம். அதிலும், இரண்டாவது அலையின் தாக்கம் அதிகமாக இருப்பதால், இரண்டு மாஸ்குகளைப் போடுங்கள் என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்துகின்றனர்.
மாஸ்க் போட்டால்தான் கொரோனாவில் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியும். ஆனால், பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பு கவசங்கள், குப்பையில் வீசப்பட்ட பின் என்னவாகிறது? அது ஏற்படுத்தும் ஆபத்து என்ன? இதைப் பற்றிய கவலைகள் ஒருபுறம் அதிகரித்துள்ளது.
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் (National Green Tribunal) மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (Central Pollution Control Board) அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. அதன்படி, நாட்டில் தினசரி சுமார் 609 மெட்ரிக் டன் சாதாரண உயிர் மருத்துவ கழிவுகள் உற்பத்தியாகின்றன. தற்போது கொரோனா பரவலால், இந்தியாவில் COVID-19 தொடர்பான உயிரியல் மருத்துவக் கழிவுகள் நாளொன்றுக்கு சுமார் 101 மெட்ரிக் டன் (MT/day) உற்பத்தியாகிறது.
ஒவ்வொரு செங்கலும் 12 x 8 x 4 அங்குல அளவு கொண்டது, ஒரு சதுர அடிக்கு 7 கிலோ பயோமெடிக்கல் கழிவுகள் பயன்படுத்தப்படுகின்றன. இது பி-பிளாக் 1.0 உடன் ஒப்பிடும்போது இலகுவானது ஒரு செங்கல் உற்பத்திக்கு 2 ரூபாய் 80 காசுகள் அடக்க விலை ஆகிறது.













