26-06-2020 முதல் மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசின் ரூ. 1000 நிவாரண நிதி தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது.
இதை பெறுவதற்கான வழிமுறைகள் :
தங்கள் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தை தொடர்பு கொண்டால் கொரோனா நிவாரண நிதிக்கான விண்ணப்பம் பெறலாம்.
இந்த விண்ணப்பத்தில் சீரியல் நம்பர் இடம் பெற்றிருப்பதால் விண்ணப்பத்தை நகல் எடுத்து வேறொருவர் விண்ணப்பிக்க இயலாது.
ஒவ்வொருவரும் தனித்தனியாகத்தான் விண்ணப்பம் வாங்கி விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து விண்ணப்பத்துடன் மாற்றுத் திறனாளிக்கான அடையாள அட்டை நகல் மற்றும் ஆதார் அட்டை நகல் சேர்த்து கொடுத்தால் அதை கிராம நிர்வாக அலுவலர் ஆராய்ந்து தங்களுக்கான கொரோனா நிவாரண தொகையை ரொக்கமாக அளிப்பார்.
முழு உடல் ஊனமுற்றோர் தங்களுடைய பிரதிநிதியை அனுப்பி விண்ணப்பத்தை அளிக்கலாம் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
ஜூலை 8 ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பு : 2003 ஆம் ஆண்டுக்கு முன்பு மாற்றுத் திறனாளி அடையாள அட்டை எடுத்திருந்தால் அவர்களுக்கு உடனடியாக நிவாரண தொகை வழங்கப்படுவதில்லை என செய்திகள் வருகின்றன. விண்ணப்பங்களை கிராம நிர்வாக அலுவலர் வாங்கிக் கொண்டு அரசு வழிகாட்டுதலுக்குப் பிறகு உங்களுக்கு தனியாக வழங்குகிறோம் என தெரிவிப்பதாக சில மாவட்டங்களிலிருந்து செய்திகள் கிடைக்கப் பெறுகின்றன.
தேவையான ஆவணங்கள் :
1. மாற்றுத் திறனாளிக்கான அடையாள அட்டை நகல்
2. ஆதார் அட்டை நகல்













