தேசிய அடையாள அட்டை
ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை தோறும் நடைபெற்று வரும் மருத்துவக்குழுக் முகாமில் மாற்றுத்திறனுடைய நபர் நேரில் ஆஜராக வேண்டும். மாற்றுத்திறன் தன்மை 40% உள்ளவா்களுக்கு மட்டும் தேசிய அடையாள அட்டை வழங்கப்படும்.
சமர்பிக்கப்பட வேண்டிய சான்றுகள்
குடும்ப அட்டை நகல் அல்லது இருப்பிடச்சான்று அல்லது ஆதார்அட்டை நகல்
பாஸ்போர்ட் புகைப்படம்-4
மாநில அரசின் கல்வித்தொகை
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பயிலும் மாற்றுத்திறனுடைய நபா்களுக்கு ஆண்டிற்கு 1-5 வகுப்பு வரை ரூ.1000, 6-8 வகுப்புவரை ரூ.3000, 9ம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை ரூ.4000 இளங்கலை பட்டப்படிப்பு / பட்டயம் ரூ.6000, முதுகலை பட்டப்படிப்பு / தொழிற்கல்வி ரூ.7000 வழங்கப்பட்டு வருகிறது
சமர்பிக்கப்பட வேண்டிய சான்றுகள்
குடும்ப அட்டை நகல்
மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை
9ம் வகுப்பு அதற்கு மேல் கல்வி பயில்பவா்கள் மதிப்பெண் சான்று சமா்பிக்க வேண்டும்.
40 சதவிகிதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
வங்கிகணக்கு புத்தக நகல் விண்ணப்பத்தோடு இணைக்கப்பட வேண்டும்
மத்திய அரசின் மூலம் 9ம்வகுப்பு மற்றும் அதற்கு மேல் படிக்கும் மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்தொகை
மத்திய அரசின் கல்வித்தொகை 9மற்றும் 12ம் வகுப்பு 6000 முதல் 9000 வரை மேல் படிப்பு படிப்பவர்களுக்கு 6000 முதல் 20000 வரை தகுதிக்கேற்ப வழங்கப்படும்.
சமர்பிக்கப்பட வேண்டிய சான்றுகள்
மத்திய அரசின் கல்வித்தொகை 9மற்றும் 12ம் வகுப்பு 6000 முதல் 9000 வரை மேல் படிப்பு படிப்பவர்களுக்கு 6000 முதல் 20000 வரை தகுதிக்கேற்ப வழங்கப்படும்.
மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மாணவர்கள் அவர்களது பள்ளி மற்றும் கல்லுாரி மூலமாக Online-ல் விண்ணப்பிக்க வேண்டும்.
https://scholarships.gov.in/













