கல்வி, வேலை வாய்ப்புகளில் தலித், பழங்குடியினருக்கு இணையாக மாற்றுத்திறனாளிகள் சலுகைகள்! உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு!

SOCIAL SHARE
Pin It

கல்வி, வேலை வாய்ப்புகளில்  தலித், பழங்குடியின பிரிவினருக்கு வழங்குவது போல் மாற்றுத்திறனாளிகளுக்கும் சலுகைகள் அளிக்க நீதிபதி ரோஹின்டன் பாலி நரிமன் தலைமையில் நீதிபதிகள் நவீன் சின்ஹா, பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு ஜூலை 8 அன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.



இத்தீர்ப்புக்கு ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை(NPRD) வரவேற்பு தெரிவித்துள்ளது.  இது குறித்து அம்மேடையின் பொதுச்செயலாளர் முரளீதரன் டெல்லியில் ஜூலை-13 அன்று  வெளியிட்டுள்ள அறிக்கை விபரம் வருமாறு:

சமூகத்தின் மிகவும் ஓரங்கட்டப்பட்ட பிரிவினரில் ஒன்றாக  மாற்றுத்திறனாளிகளை உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பு அங்கீகரித்துள்ளது, மாற்றுத்திறனாளிகளில் பலரும் பல்வகை பலர்  பாகுபாடுகளுக்கு ஆளாகி வருவது குறிப்பிடத்தக்கது.  

கல்வி, வேலைவாய்ப்பு விவகாரங்களில் தலித், பழங்குடியினருக்கு வழங்குவது போன்ற சலுகைகள் மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்க வேண்டுமென உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்திருப்பது குறிப்பிடத்தகுந்ததாகும்.  வரவேற்புக்குரிய தீர்ப்பாகும்.

மத்திய, மாநில அரசு வேலை வாய்ப்புகளில்   மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் ஏற்கனவே சலுகைகள் அளிக்கப்பட்டு வருகிறபோதும் உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பின் மூலம் வேலை வாய்ப்புகளுக்கான தேர்வு மதிப்பெண்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தளர்வு வழங்க வழிவகுக்கிறது.  

சிவில் சர்வீசஸ் தேர்வுகளில், பிற பின்தங்கிய சமூக பிரிவினருக்கு தேர்வுகள் எழுத தற்போது கூடுதல் வாய்ப்புகள் வழங்கப்படுகிற போதிலும், பொது பிரிவினரில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு  இந்த வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகிறது.  இத்தீர்ப்பின் மூலம் பொதுப்பிரிவினரில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கும் கூடுதல் முறை தேர்வு எழுத இத்தீர்ப்பின் மூலம் தீர்வு கிடைக்கும்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு விஷயத்தில் தலித், பழங்குடியினருக்கு வழங்கப்படுவது போன்று மாற்றுத்திறனாளிகளுக்கும் தளர்வுகளை விரிவாக்க வேண்டமென உச்சநீதிமன்றம் அளித்துள்ள இத்தீர்ப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கு சாதகமான பரந்த அளவிலான தாக்கங்களை ஏற்படுத்தும். 

அதிக எண்ணிக்கையிலான மாற்றுத்திறனாளிகள் தங்கள் விருப்பப்படி வேலைக்குச் செல்ல. இந்த தீர்ப்பு வழிவகுக்கும். 

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ARUNACHALAM