மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள் - 3

SOCIAL SHARE
Pin It

மாற்றுத்திறனாளிகளுக்கான தீருதவி வழங்கும் திட்டம்
 
கொலை, கொள்ளை, கொடூர காயம், பாலியல் பலாத்காரம் போன்ற துயர சம்பவங்களால் பாதிக்கப்பட்ட அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் தகுதியுடையவா்
 
மாற்றுத்திறனாளிகளால் சமர்பிக்கப்பட வேண்டிய சான்றுகள்

கொலை, கொள்ளை, கொடூர காயம், பாலியல் பலாத்காரம் போன்ற துயருற்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்ட அனைத்து வகை மாற்றுத்திறளாளிகளும் வழக்காடு மன்றத்திற்கு சென்றுவர மற்றும் வழக்கு செலவினங்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
 
மீட்புத்திட்டம்
 
மனநலம் பாதிக்கப்பட்டு ஆதரவின்றி சாலையோரங்களில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவா்களை மீட்பு திட்ட குழுவினரால் மீட்டு அரசு அனுமதித்துள்ள மனநல காப்பகங்களில் சோ்க்கப்படுவா்
 
மாற்றுத்திறனாளிகளால் சமர்பிக்கப்பட வேண்டிய சான்றுகள்
 
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருக்கு தகவல் தெரிவித்து அரசு அனுமதித்துள்ள தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் நடத்தப்படும் மனம் நல காப்பகத்தில் சோ்க்கப்படுவா்.தகவல் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண் 9787542508
9443603874
 
மூன்று சக்கர சைக்கிள்
 
இரண்டு கால்களும் செயல் இழந்து இருத்தல் வேண்டும். கைகள் நல்ல நிலையில் இருக்க வேண்டும். மேலும் 16 வயதிற்கு மேற்பட்டவராகவும் 65 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்
 
மாற்றுத்திறனாளிகளால் சமர்பிக்கப்பட வேண்டிய சான்றுகள்
 
குடும்ப அட்டை நகல் அல்லது இருப்பிடச்சான்று
மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல்
புகைப்படம் 
 
சக்கர நாற்காலி / மடக்கு சக்கர நாற்காலி
 
கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் 5 வயதிற்கு மேற்பட்டவராகவும் 70 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்
 
மாற்றுத்திறனாளிகளால் சமர்பிக்கப்பட வேண்டிய சான்றுகள்
 
குடும்ப அட்டை நகல் அல்லது இருப்பிடச்சான்று
மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல்
புகைப்படம் 
மூளை முடக்குவாத்தினால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்புசக்கர நாற்காலி
 
மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டு கை, கால்கள் செயல் இழந்தவர்களுக்காக சிறப்பு நாற்காலிகள் வழங்கும் திட்டம்
 
மாற்றுத்திறனாளிகளால் சமர்பிக்கப்பட வேண்டிய சான்றுகள்
 
குடும்ப அட்டை நகல் அல்லது இருப்பிடச்சான்று
மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல்
புகைப்படம் 
 
ARUNACHALAM