139 ஆண்டுகள் பழமையான பிரம்மாண்ட வீடு... வேறு இடத்திற்கு மாற்றம்

SOCIAL SHARE
Pin It

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள பாரம்பரிய வீடு இடிக்கப்படாமல், நவீன தொழில்நுட்ப உதவியுடன் அலேக்காக தூக்கப்பட்டு, காலி இடத்துக்கு நகர்த்தப்பட்டது. சான் பிரான்சிஸ்கோ நகரிலுள்ள 139 ஆண்டுகள் பழமையான வீடு, அடியோடு பெயர்க்கப்பட்டு 482 மீட்டர் தொலைவிற்கு அப்பால் வைக்கப்பட்டது. பிரம்மாண்ட சக்கரங்கள் கொண்ட டிரக்கின் மீது வீடு வைக்கப்பட்டு நகர்த்தி செல்லப்பட்டதை அப்பகுதி மக்கள் ஆர்ச்சயர்யத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர். 6 படுக்கை அறைகள் கொண்ட இந்த வீட்டை நகர்த்த இந்திய மதிப்பில் சுமார் 3 கோடி ரூபாய் செலவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ARUNACHALAM