ஆசிரியை ஒருவர் செவ்வாய் தோஷ நிவர்த்திக்காக தன்னிடம் பாடம் படிக்கும் 13 வயது மாணவனை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து முதலிரவும் நடத்தினார் என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நம் நாட்டில் இன்னும் மூடநம்பிக்கை, சடங்கு-சம்பிரதாயங்கள் தொடர்பான எண்ணங்கள் ஆழ வேரூன்றிப் போயிருக்கிறது. பஞ்சாப் மாநிலம் ஜலந்தரின் பஸ்தி பாவா கெல் பகுதியில் வசிக்கும் ஆசிரியைக்கு செவ்வாய் தோஷத்தினால் திருமணம் தள்ளிப் போயிருக்கிறது. இதனால் கவலையடைந்த குடும்பத்தினர் ஜோசியர் ஒருவரை அணுகியுள்ளனர்.
செவ்வாய் தோஷத்தில் இருந்து விடுபட சிறுவன் ஒருவனுடன் சம்பிரதாயமாக திருமணம் செய்தால் போதும், அதன் பிறகு ஆசிரியைக்கு வழக்கமாக திருமணம் செய்து வைத்துவிடலாம் என ஜோசியர் சொல்லியிருக்கிறார்.
ஜோசியரின் வார்த்தையை அப்படியே ஏற்றுக் கொண்ட குடும்பத்தினர், மாணவனுக்கு வீட்டில் இருந்து டியூஷன் எடுப்பதாக நாடகத்தை அரங்கேற்றினார்கள். தங்கள் வீட்டிலேயே ஒரு வாரம் தங்கி படிப்பு சொல்லிக் கொடுப்பதாக பொய்யாயச் சொல்லி, 13 வயது மாணவனின் பெற்றோரிடம் பேசி சம்மதம் வாங்கினார்கள். ஆனால், வீட்டில் திருமணத்தை செய்து முடித்துவிட்டார்கள்., இறுதியில் திருமணம் நடத்தப்பட்டது.
ஒரு வாரத்திற்கு பிறகு வீட்டிற்கு திரும்பிய சிறுவன் நடந்த விஷயங்கள் அனைத்தையும் தனது பெற்றோரிடம் சொன்னதும், கொதித்தெழுந்த குடும்பத்தினர், காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அந்த புகாரில், நலங்கு, திருமண சடங்குகள், முதலிரவு என அனைத்தையும் தன்னை கட்டாயப்படுத்தி வலுக்கட்டாயமாக செய்ய வைத்ததாக சிறுவன் குற்றம் சாட்டினான். அதுமட்டுமல்ல, கணவன் இறந்ததற்கான சடங்குகளையும் செய்திருக்கின்றனர் ஆசிரியையின் குடும்பத்தினர்.
இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இருதரப்பினரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அது உண்மை என தெரியவந்தது. இதனிடையே, ஆசிரியையின் குடும்பத்தினர் சமரசம் பேசியதை அடுத்து, இரு தரப்பினரும் சமாதானமாகிவிட்டனர். புகாரும் வாபஸ் பெறப்பட்டது இச்செய்தி அனைத்து ஊடகங்களிலும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.













