திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எம்ஜிஆர் - அன்றைய கள நிலவரம்

SOCIAL SHARE
Pin It

திமுக தொடங்கப்பட்டு சந்தித்த முதல் சட்டமன்ற தேர்தல் 1957 தேர்தல் ஆகும். இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தாலும், மறைந்த முன்னாள் முதல்வர்கள் சி.என்.அண்ணாதுரை மற்றும் மு. கருணாநிதி, க. அன்பழகன் ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அண்ணா காஞ்சிபுரம் தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார். கருணாநிதி குளித்தலை தொகுதியிலிருந்து வெற்றி பெற்றார்.

1957ஆம் ஆண்டில் அண்ணா காஞ்சிபுரத்திலும், கருணாநிதி குளித்தலை தொகுதியிலும் முதல் முறையாக திமுக சார்பில் போட்டியிட்டனர். 1967ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர் முதல் முறையாக திமுக சார்பில் பரங்கிமலை தொகுதியில் போட்டியிட்டார்.

1962ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அண்ணா தோல்வியை தழுவினாலும், அக்கட்சி 50 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. அந்த தேர்தலிலும் தொடர்ந்து காங்கிரஸ் வெற்றி பெற்றது. பிரதான எதிர்கட்சி அந்தஸ்தை திமுக பெற்றது. திமுக சார்பில் போட்டியிட்ட முக்கிய தலைவர்களில் வெற்றி பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர் மு. கருணாநிதி.

1967ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார் காமராஜர். அவரை எதிர்த்து திமுகவை சேர்ந்த பெ. சீனிவாசன் போட்டியிட்டார். தமிழ்நாட்டில் மாணவர்கள் முன்னெடுத்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் முக்கிய நபர்களில் ஒருவராக இருந்தவர் சீனிவாசன். தேர்தல் முடிவுகளில் விருதுநகர் தொகுதியில் 1,200 வாக்குகள் வித்தியாசத்தில் காமராஜர் தோற்றார். கக்கன், பக்தவத்சலம் போன்றோரும் அந்த தேர்தலில் தோல்வியை சந்தித்தனர்.

1967ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், திமுக தலைவர் அண்ணா போட்டியிடவில்லை. மாறாக தென் சென்னை மக்களைவைத் தொகுதியில் போட்டியிட்டார். அதேபோல 1971ஆம் ஆண்டு தேர்தலில் காமராஜர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடவில்லை. நாகர்கோவில் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். 1967 ஆண்டு திமுக தேர்தலில் வென்றது. 1971இல் நடந்த தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி மீண்டும் தோற்றது.

அதிமுக தொடங்கப்பட்டு முதன்முறையாக சந்தித்த தேர்தல், 1977ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல். திமுகவில் இருந்து பிரிந்த எம்ஜிஆர் தொடங்கிய அதிமுக, அந்த தேர்தலில் போட்டியிட்ட 200 தொகுதிகளில் 130ஐ கைப்பற்றி ஆட்சி அமைத்தது. எம்ஜிஆர் அருப்புக் கோட்டை தொகுதியில் போட்டியிட்டார்.

 

ARUNACHALAM