திருச்சி துவாக்குடியில் உள்ள தேசிய தொழில் நுட்பக் கழகம் (NIT) இந்திய அளவில் சிறப்பிடம் பெற்றது. இங்கு பொறியியல் தொழில் நுட்பத்தில் இளநிலைப் பட்டம் தொடங்கி, ஆராய்ச்சி படிப்பு வரை நடத்தப்படுகின்றன. அதனோடு இந்திய பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி, மேம்பாட்டுத் துறையோடு இணைந்து ஆராய்ச்சி பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தொழில்நுட்ப படிப்புகளுக்காக பெயர் பெற்ற என்.ஐ.டியில் கடந்த ஆண்டு முதல் ஆங்கில முதுகலைப் பட்டப் படிப்பும் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி, நடப்பாண்டிற்கான (2021 -22)ம் எம்.ஏ ஆங்கில மொழி இலக்கிய படிப்பிற்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. உயர்தொழில் முறைக் கல்விக்கேற்பவும் கலை, அறிவியல், தொழில்நுட்பங்களுக்கு இடையிலான வேறுபாடுகளைப் போக்கும் வகையில் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்களின் படைப்பாற்றல், தனித்தன்மையை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ள என்.ஐ.டி M.A படிப்பில் சேர வரும் 30ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது குறித்த மேலும் விபரங்களை, இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்கிற மின்னஞ்சல், http/admission.nitt.edu/ma2021 online portalலிலும் 0431 250 3690, 250 3691,94860 01130 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும், சேர்க்கைக்கான விண்ணப்பத்தை இணையத்திலேயே வரும் 30ம் தேதி மாலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 25 இடங்களுக்கு கடந்த ஆண்டு 236 பேர் விண்ணப்பித்தனர். நடப்பாண்டு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.













