ஜெர்மனி மருத்துவமனை பெண் ஊழியரின் ஆத்திரம் - 4 பேர் சுட்டுக்கொலை

SOCIAL SHARE
Pin It
ஜெர்மனி மருத்துவமனையில் பெண் ஒருவர் 4 பேரை கொலை செய்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஜெர்மனி போட்ஸ்டம் நகரிலுள்ள மருத்துவமனை ஒன்றில் பணியாற்றிய 51 வயதான பெண் ஊழியர், நோயாளிகளிடம் காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது.
 
அவர், அங்கு சிகிச்சை பெற்றுவந்த 5 பேரை தாக்கியதில் 4 பேர் உயிரிழந்தனர்.  ஒருவர் படுகாயமடைந்தார். தகவலறிந்து நிகழ்விடத்திற்குவந்த போலீசார், அப்பெண்ணை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். தாக்குதலுக்கான காரணம் தெரியாத நிலையில் அதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ARUNACHALAM