சாராயக் கடையை திறந்தால் கொரோனா ஓடிவிடும் - டெல்லி பெண்ணின் அதிரடி பேச்சு

SOCIAL SHARE
Pin It

குடிமகன்கள் குடியை நோக்கி சென்றுவிட்டால், மருத்துவமனைப் பற்றாக்குறையும் இருக்காது, இறுதியில் அரசாங்கத்திற்கும் பிரச்சினைகள் இல்லை என்கிறார் அதிபுத்திசாலி பெண் டோலி.

சில நாட்களுக்கு முன்னதாக ஒரு வீடியோவை வெளியிட்ட டோலி, எந்தவொரு தடுப்பூசியும் ஆல்கஹால் அளவுக்கு வீரியம் கொண்டதில்லை என்று தெரிவித்திருந்தார்.

ஆல்கஹால் மட்டுமே சரியான சிகிச்சை தரும், எஞ்சியதெல்லாம் சும்மா என்றும் அவர் சொல்லியிருந்தார். 35 ஆண்டுகளாக தான் மது அருந்துவதாகவும், வேறு எந்த மருந்தும் தேவையில்லை என்றும் டோலி கூறுடிகிறார். 

இன்னொரு வீடியோவில் பேசியுள்ள டோலி, மதுபானக் கடைகளை மீண்டும் திறக்குமாறு அதில் அவர் டெல்லி அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

"மதுபானக் கடைகள் திறக்கப்பட்டால், மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாக இருக்கும், தில்லி அரசு இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்ளாது, ஆக்ஸிஜன் சிலிண்டரின் பிரச்சினையும் நீங்கும். மக்கள் மது அருந்தினால், உடலில் உள்ள கொரோனா வெளியே சென்றுவிடும்”என்று அவர் வீடியோவில் கூறுகிறார்.

இந்த லாக்டவுனிலும் குடிப்பதற்கு உங்களிடம் சரக்கு இருக்கிறதா என்று டோலியிடம் ஒருவர் கேட்கி, தன்னிடம் போதுமான அளவு மது இருந்ததாகவும், ஆனால், இப்போது எல்லாமே தீர்ந்துவிட்டது என்றும் வருத்தப்படுகிறார் ஆண்ட்டி.

அதனால் தான் விரைவில் கடைகளை  திறக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கிறேன் என்று அவர் கூறுகிறார்.
 
இவரது வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ANI செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், “தடுப்பூசிகள் போடுவதற்கோ, மருந்துகளை வாங்கி சேர்க்கவோ நான் இங்கு வரவில்லை. வைரஸில் இருந்து என்னை பாதுகாக்க இரண்டு பாட்டில்கள் மதுபானங்களை வாங்க நான் இங்கு வந்துள்ளேன். நான் 35 ஆண்டுகளாக குடித்து வருகிறேன், ஒருபோதும் எந்த மருந்தையும் எடுத்துக் கொண்டதில்லை.  குடிப்பவர்கள் அனைவரும் கோவிட்டிலிருந்து பாதுகாப்பாக உள்ளனர்” என அதிரடியாக தெரிவித்தார் டோலி.

வயதான பெண்ணின் தைரியமான மற்றும் வித்தியாசமான அணுகுமுறை பலரை மகிழ்வித்தது, மற்றவர்கள் அவரது கருத்துக்கு மீம்களை பகிர்ந்து வருகின்றனர்.

ARUNACHALAM