ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோத இருந்தன. இந்த நிலையில், கொல்கத்தா அணியில் விளையாடும் தமிழக வீரரான வருண் சக்ரவர்த்தி மற்றும் கேரளாவை சேர்ந்த சந்தீப் வாரியர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியது.
கொல்கத்தா அணி வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் இன்று நடைபெறவிருந்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டம் ஒத்திவைக்கப்பட இருப்பதாக பிசிசிஐ தெரிவித்தது.
ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்கள் கடுமையான பயோ பாதுகாப்பு வளையத்தில் உள்ளனர். இதையும் மீறி வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங் அணியைச் சேர்ந்த மூன்று பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் இவர்களில் வீரர்களில் யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை எனத் தெரிய வந்துள்ளது. சென்னை அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், பந்துவீச்சுப் பயிற்சியாளர் பாலாஜி மற்றும் பேருந்து கிளீனர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.













