ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இங்கிலாந்தின் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 18ம் தேதி முதல் ஜூன் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
விராட் கோலி (கேப்டன்) , ரஹானே (துணைகேப்டன்), ரோகித் ஷர்மா, சுக்மன் கில், மயங்க் அகர்வால், புஜாரா, விஹாரி, ரிஷப் பண்ட், ரவிசந்திரன் அஸ்வின், ஜடேஜா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ்.
கேஎல் ராகுல், சஹா ஆகியோர் உடற்தகுதியை பொறுத்து இந்திய அணியில் தேர்தெடுக்கப்படுவர் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.













