தோனியை மிகவும் மிஸ் செய்கிறேன்: குல்தீப் யாதவ்

SOCIAL SHARE
Pin It

இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் சில காலமாக இந்திய அணியில் ஆடாமல் உள்ளார். கடந்த சில போட்டிகளில் அவர் அணியில் சேர்க்கப்படுவதும் நீக்கப்படுவதுமாக உள்ளார். 

ஒரு சமயத்தில் யுஸ்வேந்திர சாஹலுடனான அவரது ஜோடி சூப்பர்ஹிட் ஜோடியாக இருந்தது. ஆனால் இப்போது இந்த இரு சுழற்பந்து வீச்சாளர்களாலும் இந்திய அணியில் தங்களுக்கென ஒரு இடத்தைப் பிடிக்க முடியவில்லை. 

மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அனைத்துமே மாறி விட்டது என்றார் குல்தீப் யாதவ். ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், குல்தீப் யாதவ், 'எனக்கு தோனியின் நினைவு அடிக்கடி வரும். அவர் ஸ்டம்புக்கு பின்னாலிருந்து எங்களிடம் ஏதாவது சொல்லிக்கொண்டிருப்பார், ஏதாவது ஆலோசனை கூறிக்கொண்டிருப்பார்." என்றார். 

'தோனி பாய்க்கு மிகப்பெரிய அனுபவம் உண்டு. தோனி அணியில் இருந்தபோது நானும் சாஹலும் ஒன்றாக விளையாடுவோம். அவர் ஓய்வு பெற்றதிலிருந்து நானும் சாஹலும் ஒன்றாக விளையாடவில்லை. தோனி ஓய்வு பெற்றதிலிருந்து நான் மிக சில போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளேன். நானும் ஒரு ஹாட்ரிக் கூட எடுத்தேன்." என்றார்.

"நான் தோனி பாயை மிஸ் செய்கிறேன். அவரது அனுபவத்தை மிஸ் செய்கிறேன். அதிக போட்டிகளில் விளையாட விளையாட, ஸ்டம்புக்கு பின்னாலிருந்து பந்துவீச்சாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கும் திறமையும் அவருக்கு அதிகரிக்கும். ஒவ்வொரு பந்து வீச்சாளருக்கும் மறுமுனையில் ஒரு சரியான ஜோடி தேவை என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது"  என்று குல்தீப் யாதவ் கூறினார். 

மகேந்திர சிங் தோனி ஓய்வு பெற்ற பிறகு, குல்தீப் யாதவுக்கு இந்திய அணியில் விளையாட மிகக் குறைந்த வாய்ப்புகளே கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் 2021லும் அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. 

ARUNACHALAM