தமிழக அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு மாத ஊதியம்: ரூ.63,000/-

SOCIAL SHARE
Pin It

இந்தியா போஸ்ட்- தமிழ்நாடு அஞ்சல் வட்டம் சென்னையில் அஞ்சல் சேவையில் காலியாக உள்ள M.V Mechanic, Copper & Tinsmith, Painter, Tyreman, M.V Electrician and Driver பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பதிவிக்கு தபால் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே, ஆர்வமுள்ளவர்கள் 26.05.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் தமிழக அஞ்சல் துறை
பணியின் பெயர் Tyreman, Blacksmith மற்றும் Staff car Driver
பணியிடங்கள் 35
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.05.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
சென்னை அஞ்சல் துறை காலிப்பணியிடங்கள்:
  • M.V Mechanic 05
  • Copper & Tinsmith 01
  • Painter 01
  • Tyreman 01
  • M.V Electrician 02
  • Driver 25
அஞ்சல் துறை தகுதி விவரங்கள்:

மேற்கூறிய பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பத்தார்களை நியமிப்பதற்காக தமிழ்நாடு தபால் அலுவலக ஆட்சேர்ப்பு அறிவிப்பு [MSE / B9-4 / X / 2019 & MSE / B9-2 / XV / 2021] 05.05.2021 அன்று வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு குறுகிய அறிவிப்பாக மட்டுமே வெளிவந்துள்ளது. மேலும் இந்த அறிவிப்புக்கான கல்வி தகுதி, வயது வரம்பு போன்ற விவரங்கள் www.indiapost.gov.in என்ற இணைய முகவரியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாத ஊதியம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து மூத்த மேலாளர், அஞ்சல் ஊர்தி சேவை , நெ.37, (பழைய எண் 16/1), கிரீம்ஸ் சாலை, சென்னை– 600 006. என்ற முகவரிக்கு 26.05.2021 க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ARUNACHALAM