83 வயதான அமோ (Amou Haji), 65 ஆண்டுகளாக தனது உடலில் ஒரு சொட்டு நீர் (Water) கூட படாமல் தன்னை பாதுகாத்து வருகிறார். ஏனெனில் அவர் தண்ணீரைக் கண்டால் அச்சம்! குளித்தால் அவருக்கு நோய் வந்துவிடும் என்று பயப்படுகிறார்!
அமோ ஹாஜிக்கும் சுத்தத்துக்கும் ஏணி வைத்தாலும் எட்டாத தூரம். அவருக்கு சுத்தம் என்றாலே அலர்ஜி! தான் குளிக்கவில்லை என்பதோடு, தான் பயன்படுத்தும் பொருட்களையும் சுத்தம் செய்யும் பழக்கமே அவருக்கு கிடையாது. ஈரானில் வசிக்கும் அமோ ஹாஜி, கடந்த 65 ஆண்டுகளாக குளிக்கவில்லை என்று கூறுகிறார். அமோ ஹாஜியின் வாழ்க்கை முறையும் அதிர்ச்சளிப்பதாகவே இருக்கிறது.
அவரைப் பொறுத்தவரை, குளிக்காமல் அழுக்காக இருப்பதால் தான் ஆரோக்கியமாக இருக்கிறார் என்கிறார். ஆனால், இத்தனை ஆண்டுகளாக குளிக்காமல் நாற்றத்துடன் இருக்கும் Amou Haji, இதன் காரணமாக கிராமத்திற்கு வெளியே தான் தங்க வேண்டியிருக்கிறது.
இந்த அழுக்கு மனிதரின் உணவுப் பழக்க வழக்கங்களும் வித்தியாசமானதாகவே இருக்கிறது. இறந்த விலங்குகளின் அழுகிய இறைச்சியை சாப்பிடுவதே அவருக்கு பிடிக்குமாம்! அந்த விலங்குகள் விபத்தில் இறந்திருந்தாலும் சரி, இயற்கை வழியில் இறந்திருந்தாலும் சரி, அது பற்றி அவருக்கு கவலையில்லை! அசைவ உணவையே விரும்பி சாப்பிடும் அமாவு, அழுகிய உள்நாட்டு கீரைகள் மற்றும் காய்கறி உணவுகளையும் விரும்புகிறார். அமோவுக்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட சுவையான உணவு சாப்பிட பிடிக்கவே பிடிக்காது!
Amou ஹாஜிக்கு சொந்தமாக வீடு கூட இல்லை. அவர் தனது கிராமத்திலிருந்து வெகு தொலைவில் இருக்கும் வெட்டவெளியில் வசிக்கிறார். இருப்பினும், கிராமவாசிகள் Amou-க்காக ஒரு சிறிய குடிசையை கட்டிக் கொடுத்துள்ளனர். ஆனால் அவருக்கு வெட்டவெளியே பிடித்திருக்கிறதாம். இவ்வளவு அழுக்காக இருந்தாலும், அழுகிய மாமிசத்தையும், காய்கறிகளையும் சாப்பிட்டாலும் அவருக்கு எந்தவித நோயோ தொற்றொ இல்லை என்பது அதிசயம் தான்.
அமாவுக்கு சிகரெட் புகைப்பது மிகவும் பிடிக்குமாம்… சிகரெட் புகைப்பதிலும் அமோ வித்தியாசமானவர் தான். ? தனது சிகரெட் பைப்பில், விலங்குகளின் உலர்ந்த மலத்தை போட்டு புகைப்பாராம்! இந்த உலகின் அனைத்து வசதிகளையும் துறந்துவிட்டு, இப்படி வாழ்வது தான் தனக்கு பிடித்திருப்பதாக உலகின் அழுக்கு மனிதர் கூறுகிறார்.













