மலேசியாவில் இரு மெட்ரோ ரயில்கள் நேருக்கு நேர் மோதல் - 200 பேர் படுகாயம்

SOCIAL SHARE
Pin It

 மலேசியாவில் இரு மெட்ரோ ரயில் நேருக்கு நேர் மோதி 200 பயணிகள் காயமடைந்துள்ளனர். மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பெட்ரோனஸ் இரட்டை கோபுர சுரங்கபாதையில் கடந்த 24ம்தேதி இரவு 9 மணி அளவில் மெட்ரோ ரயில் ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.

அப்போது, அதே தண்டவாளத்தில் எதிர் முனையில் காலிப்பெட்டிகளுடன் மற்றொரு ரயில் வந்தது. இரு ரயில்களும் மோதியதில், ரயிலில் இருந்த 200 பயணிகள் காயமடைந்தனர். உடனடியாக போலீசாரும், மீட்பு படையினரும் விரைந்து வந்து காயமடைந்த பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். படுகாயமடைந்த 47 பயணிகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுவதாக கூறப்படுகிறது. விபத்தின் போது இரு ரயில்களும் குறைவான வேகத்திலேயே வந்துள்ளன. இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

ARUNACHALAM