ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும்? மலாலா கேள்வியால் புதிய சர்ச்சை

SOCIAL SHARE
Pin It

சமூக ஆர்வலர் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு பரிசு பெற்ற மலாலா யூசுப்சாய் சமீபத்தில் பிரிட்டிஷ் வோக்கின் அட்டைப்படத்தில் இடம்பிடித்தார். திருமணம் குறித்த யூசுப்சாயின் கருத்துக்கள் பாகிஸ்தான் சமூக ஊடகங்களில் புயலை கிளப்பியுள்ளது. அதோடு, மலாலா இடம்பெற்றிருந்த பத்திரிகையின் அட்டைப்படமும் வைரலானது. 

செய்தியாளரிடம் பேசிய மலாலா யூசப்சாய், அரசியல், கலாச்சாரம், தனிப்பட்ட வாழ்க்கை என பல விஷயங்கள் குறித்து வெளிப்படையாக பேசினார். இருப்பினும், திருமணம் குறித்த அவரது கருத்துக்கள் பாகிஸ்தானில் பலருக்கு எரிச்சலூட்டியிருக்கிறது.  

திருமணத்தைப் பற்றி பேசிய யூசுப்சாய், எல்லோரும் தங்கள் உறவுக் கதைகளை சமூக ஊடகங்களில் பகிர்வதைப் பார்ப்பது கவலை ஏற்படுவதாக தெரிவித்தார். "நீங்கள் ஒருவரை நம்ப முடியுமா இல்லையா என்பதே தெரியாத நிலையில்... நீங்கள் எப்படி உறுதியாக இருக்க முடியும்?" என்று கேள்வி எழுப்பினார்.

"ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எனக்கு இன்னும் புரியவில்லை. உங்கள் வாழ்க்கையில் ஒரு நபர் வரவேண்டும் என்று விரும்பினால், ஏன் திருமணம் செய்துக் கொள்ளவேண்டும்? அவர் ஏன் ஒரு கூட்டாளராக இருக்க முடியாது (திருமணம் செய்துக் கொள்ளாமல்)? ".

இந்த கருத்துக்கள் பழமைவாத பாகிஸ்தானின் சமூக ஊடகங்களில் புயலை கிளப்பி இருக்கிறது. இஸ்லாமின் கொள்கைகளுக்கு எதிரான மலாலா, "பொறுப்பற்ற" அறிக்கைகளால் இளைஞர்களின் மனதை சிதைக்க முயற்சிப்பதாக பலர் குற்றம் சாட்டியுள்ளனர். "மேற்கத்திய கலாச்சாரத்தை" நகலெடுக்கிறார் மலாலா என்றும் திட்டித் தீர்க்கின்றனர். புனிதமான திருமணத்தின் புனிதமான விதிகளைப் பற்றி எதிர்மறையான கருத்துக்களைப் பரப்பியதற்காக சமூக ஆர்வலர் குற்றம் சாட்டினார்.

பிரிட்டிஷ் வோக்கின் அட்டைப்படம் வைரலாகிய சில நாட்களுக்குப் பிறகு, ‘marriage’ மற்றும் Malala  என்ற ஹேஷ்டேக்கள் சமூக ஊடகங்களில் பிரபலமடையத் தொடங்கின. அதில் பல கருத்துக்கள் பாலியல் ரீதியானதாகவும், அவதூறு பேசுவதாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ARUNACHALAM