ஓர் உயிரினத்தின் அழிவு, வாழ்விட அழிவிற்கும் வழிவகுக்கும் எச்சரிக்கும் சூழலியாளர்கள்

SOCIAL SHARE
Pin It

சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கம், அருகிவரும் நிலையில் இருக்கும் உயிரினங்கள் என 5000 உயிரினங்களை பட்டியலிட்டுள்ளன. அவற்றில் சீனாவில் உள்ள யுனான பாக்ஸ் ஆமை, சுமத்திரா காண்டாமிருகம், ஆரஞ்சு நிறத்தில் வயிற்றுப் பகுதி கொண்ட கிளி ஆகியவையும் அடங்கும்.

குறிப்பாக சுமத்திரா காண்டமிருகம் நூற்றுக்கும் குறைவாகதான் உள்ளதாக கூறுகிறது சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கம். வேட்டை ஆடப்படுவதுதான் இந்த எண்ணிக்கை குறைவதற்கு முக்கியமான காரணம் என்று கூறுகிறது இந்த சங்கம்.

ஏதோ ஒரு விலங்கு அழிந்தால் நாம் ஏன் கவலைக் கொள்ள வேண்டும்? - என்பது நம் கேள்வியாக இருந்தால், ஏதோ ஒரு விலங்கின் அழிவு மனித அழிவுக்கு வழிவகுக்கலாம் என்கிறார்கள் சூழலியலாளர்கள்.

" இது ஓர் உயிர்வலைபின்னல், இந்த பின்னலில் ஒரு கண்ணி அறுப்பட்டால், இன்னொன்றுக்கு நிச்சயம் ஆபத்தும் வரும், அழிவும் வரும். உணவு சங்கிலியில் மனிதன் மேலே இருக்கிறான். மேலே இருப்பதால், அதிக ஆபத்தும் பொறுப்பும் ஒருங்கே மனிதனுக்குதான் இருக்கிறது." என்கின்றனர் சூழலியாளர்கள்.

"இதை எளிமையாக புரிந்து கொள்ள வேண்டுமானால், பாசியை சொல்லலாம். மனிதன் பாசியை நேரடியாக உண்பதில்லை. ஆனால் பாசியை உண்ணும் மீனை மனிதன் உண்கிறான். பாசியில் விஷம் ஏறியது என்றால், அது உண்ணும் மீனை முதலில் பாதிக்கும். பின், மீனை உண்ணும் மனிதனை பாதிக்கும். அது போலதான் ஓர் உயிரினத்தின் அழிவும்." என்கிறார்கள்.

ஓர் உயிரினத்தின் அழிவு, வாழ்விட அழிவிற்கும் வழிவகுக்கும்.

குறிப்பாக புலி, காண்டாமிருகம் போன்ற குடை இனம் (Umbrella Species) அழிந்தால், அவை ஆளுகை செலுத்தும், அதன் வாழ்விடமும் நாசமாகும்.

ஏதோ ஒரு விலங்கு அழிகிறது என்று மெளனியாக இருந்துவிடக்கூடாது. அழிந்து வரும் உயிரினத்தை காப்பதில் அதிக அக்கறை செலுத்த வேண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

ARUNACHALAM