வளர்ச்சியைத் தரும் ஊடகம் & டிஜிட்டல் ஊடகப் படிப்புகள்

SOCIAL SHARE
Pin It

எந்தத் துறை வளர்ந்தாலும், வீழ்ந்தாலும்…நிலையாக எப்போதும் ஒரே சீரான வளர்ச்சியையும் வேலைவாய்ப்புகளையும் அளிக்கும் துறை, ஊடகம் (Media). முன்பெல்லாம், பத்திரிகைகள், செய்தித் தாள்கள் மட்டுமே இருந்து வந்ததால், முறையாக பி.ஏ, எம்.ஏ. ஜர்னலிசம் படிப்புகளை முடித்தவர்களுக்கு மட்டும்  வேலை வாய்ப்புகள் இருந்து வந்தன. ஆனால்,

தற்போது ஊடகத் துறையில் பொழுதுபோக்கு அம்சங்கள் வளர்ந்து கொண்டே போவதால், கிரியேட்டிவ் ஆக யோசிக்கும் ஆற்றல் கொண்டவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு காத்திருக்கிறது.

பத்திரிகைகள் மட்டுமின்றி, தொலைக்காட்சி சேனல்கள், எஃப்.எம் ரேடியோ, இணையதளங்கள், யுடியூப் சேனல்கள் என எல்லைகள் விரிந்துகொண்டே போகின்றன.

பி.எஸ்சி விசுவல் கம்யூனிகெசன் (விஸ்காம்), பி.எஸ்சி (எலக்ட்ரானிக் மீடியா), பி.எஸ்சி (அனிமேஷன்), (பிலிம் மற்றும் டிவி புரொடக்‌ஷன்), பி.ஏ. (ஜர்னலிஷம்) ஆகியவையும் ஊடகத்துறையில்  வேலைவாய்ப்புகளை அளிக்கும் படிப்புகளாகும்.
 
கிரியேட்டிவிட்டி இருந்தால் பணம் கொடுக்கும் ‘யுடியூப்’

ஊடகங்களில் வேலை செய்வோர் போக, இப்போதெல்லாம் யாரிடமும் வேலை செய்யாமல் தங்களது கிரியேட்டியை மூலதனமாகக் கொண்டு பல்லாயிரக்கணக்கில் சம்பாதிக்கின்றனர்.

எவர் வேண்டுமானாலும் யுடியூப் சேனல் தொடங்கலாம் என்ற சுதந்திரம் அளிப்பட்ட போது, நகைச்சுவை, செய்திகள், பயனுள்ள தகவல்களைக் கொண்ட சேனல்களை தங்களுக்கென்று இளைஞர்கள் உருவாக்கினார்கள். சில காலம் சென்றதும், அதிக மக்கள் பார்வையிட்டு, பின்தொடரும் யுடியூப் சேனல்களுக்கு வருவாய் அளிப்பதாக கூகுள் கூறிய போது ஆயிரக்கணக்கான சேனல்கள் உதயமாகின. அவற்றுள் சுவாரஸியமான, பயனுள்ள, புதுமையான விஷயங்களைக் கொண்ட சேனல்கள் பிரபலமாகின. அந்த சேனல்களின் வீடியோக்களில் தங்களது வாடிக்கையாளர்களின் விளம்பரங்களை வெளியிடும் கூகுள், அவதில் ஒரு சதவீதத்தை அந்த சேனலின் உரிமையாளருக்கு அளிகும்.

அந்த வகையில் ஏராளமானோர், ஆயிரக்கணக்கில் பணம் சம்பாதிக்கின்றனர். தற்போது முன்னணியில் உள்ள அனைத்து தமிழ், ஆங்கில பத்திரிகைகள், தொலைக்காட்சி சேனல்கள், வானொலி நிறுவனங்கள், ஊடக நிறுவனங்கள் தங்களுக்கான சேனல்களை தொடங்கி லட்சக்கணக்கில் சம்பாதிக்கின்றனர்.

இதுபோன்ற பெரிய யுடியூப் சேனல்களில் கிரியேட்டிவ் ஐடியாக்கள் கொண்டவர்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகம் அளிக்கப்படுகிறது. நீங்களும் சொந்தமாக சேனலை எளிதாக தொடங்கி பிரபலமாக்கி அதன் மூலம் சம்பாதிக்கலாம்.
 
சமூக ஊடகங்களில் வேலைவாய்ப்புகள்

டிஜிட்டல் மார்க்கெட்டிங்

விளம்பரம் என்பது  உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் தங்களது பொருளை விற்க மேற்கொள்ளும் முயற்சிகளில் மிக முக்கியமானது. இது தான் ஒரு தொழிலின் அஸ்திவாரம் என்றே சொல்லலாம். தற்போது உலக நாடுகளில் உள்ள அனைத்து நிறுவனங்களும் ஆன்லைன் நிர்வாகத்திற்கு மாறியுள்ளதால், ஆன்லைனில் மார்க்கெட்டிங் செய்து வர்த்தகத்தை வளர்க்க உதவுவது தான் டிஜிட்டல் மார்கெட்டிங்.

டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் முக்கிய பணிகள்

டிஜிட்டல் மார்க்கெட்டிங் மேனேஜர்: டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் மிகவும் உயர்ந்த நிலை இதுதான் என கூறலாம். டிஜிட்டல் மார்க்கெட்டிங் மேலாளர், இயக்குநர், ஒட்டுமொத்த மார்க்கெட்டிங் மேம்பாட்டிற்கான பணிகளை மேற்கொள்வதோடு, வெப்சைட் டெவலப்மெண்ட் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவர். டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் தற்போது ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே, டிஜிட்டல் மார்க்கெட்டிங் குறித்த பயிற்சிகளும் அதிகளவில் நடத்தப்படுகின்றன. முறையாக பயிற்சிகள் பெற்று, ஆன்லைன் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் பெறலாம். வேலைவாய்ப்புகள் வேண்டால் என்றால், சொந்தமாக செலவில்லாமல் டிஜிட்டல் மார்க்கெடிங் ஏஜென்சி தொடங்கி வருவாய் ஈட்டலாம்.

சோஷியல் மீடியா மேனேஜர்:

சமூக ஊடகம் என்பது தற்போது பொழுதுபோக்கிற்கான தளம் மட்டுமல்ல…வர்த்தகத்தை வளர்க்கக் கூடிய களமாகவும் மாறியுள்ளது. இதனால், சோஷியல் மீடியா நிர்வகிக்கும் வேலைவாய்ப்புகளும் பெருகியுள்ளன. ட்விட்டர், ஃபேஸ்புக், உள்பட அனைத்து சமூக ஊடக தளங்களிலும் நிறுவன சேவைகளை கொண்டு செல்லும், நிர்வகிக்கும் பணிகளை இவர்கள் செய்வார்கள்.

எஸ்சிஓ நிர்வாகி

எந்த ஒரு நிறுவனமானாலும், அதன் ஆன்லைன் சேவையை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் பணியை சர்ச் இன்ஜின் ஆப்டிமைசேஷன் எனப்படும் (எஸ்சிஓ) நிர்வாகிகள் செய்கின்றனர். கூகுள் தேடலில் வலைதளம் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை கண்காணித்து, எந்த வகையான வார்த்தைகள் மூலமாக பயனாளர்கள் வலைதளத்திற்குள் வருகிறார்கள் என்பதை கண்டுபிடிப்பது, அது தொடர்பான கீவேர்டுகளை பயன்படுத்துவது தான் இவர்களின் வேலை

உள்ளகடக்க மார்க்கெட்டிங்

விளம்பரங்களின் உள்ளடக்கத்தை தயாரித்து, அதை எஸ்சிஓ மூலமாக மார்க்கெட்டிங் செய்வது இவர்களின் வேலை. படைப்பாற்றல், ஆங்கில மொழி அறிவு மிக அவசியம். மேலும் சில ஆன்லைன் பணிகள்:

அனலிட்டிக்ஸ் மேனேஜர்

சிஆர்எம் மேனேஜர்

இமெயில் மார்கெட்டிங் மேனேஜர்

இ-காமர்ஸ் மேனேஜர்

மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் கல்வித்தகுதி என குறிப்பாக எதுவுமில்லை. நிர்வகிக்கும் திறன், கிரியேட்டிவிட்டி, மார்க்கெடிங் திறன் ஆகியவற்றோடு கொஞ்சம் பயிற்சி எடுத்துக் கொண்டால் நீங்கள் சம்பாதிக்கலாம். மேற்கண்ட துறைகளில் சான்றிதழ் பயிற்சிகள் அளிப்பதற்கு ஏராளமான பயிற்சி மையங்கள் உள்ளன. தொடக்கத்தில் குறைவான வருவாய் கிடைத்தாலும், சற்று அனுபவம் கிடைத்ததும், நல்ல வருவாய் ஈட்டலாம்.

ARUNACHALAM