மலையாளத்தில் சாய்பல்லவி அறிமுகமான பிரேமம் படம் வெற்றி பெற்றதால் இதர மொழி படங்களில் அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. தமிழில் தியா, மாரி-2, என்.ஜி.கே, படங்களில் வந்தார்.
தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார். மலையாளத்தில் பிருதிவிராஜ், பிஜுமேனன் இணைந்து நடித்து வெற்றி பெற்ற அய்யப்பனும் கோஷியும் படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் பிஜுமேனன் கதாபாத்திரத்தில் பவன் கல்யாண், பிருதிவிராஜ் வேடத்தில் ராணா ஆகியோர் நடிக்கின்றனர்.
சாகர் கே.சந்திரா இயக்குகிறார். இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் உள்ளனர். இதில் பவன் கல்யாண் மனைவியாக நடிக்கும் போராளி பெண் கதாபாத்திரத்தில் நடிக்க சாய்பல்லவியை படக்குழுவினர் அணுகினர். அவர் ரூ.2 கோடி சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது. இன்னொரு நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.













