அதிகளவில் தண்ணீர் அருந்தினால் சீறுநீரக வேலை செய்வதில் பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது உங்களுக்கு அதிர்ச்சியான தகவலாக இருக்கலாம். ஏனெனில் நமது நண்பர்கள், உறவினர்கள், குடும்ப உறப்பினர்கள் அனைவருமே எப்போதும் அதிக தண்ணீரை அருந்துமாறுதான் நம்மிடம் பரிந்துரைப்பார்கள். இதை பற்றி நியூட்ரிஷியன் என்ற இதழ் ஒரு ஆய்வை தயார் செய்து வெளியிட்டுள்ளனர்.
அதன்படி அதிகப்படியான நீரை அருந்துவதன் மூலம் உங்கள் உடலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்களை பராமரிக்க முடியாமல் போய்விடும். இது உங்கள் உடல் ஆரோக்கியத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும். இந்த குழப்பங்களால் உங்களுக்கு சில நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
உடலின் ஆற்றலுக்கு எலக்ட்ரோலைட் உதவுகிறது. இந்த எலக்ட்ரோலைட் சமநிலையில் இருக்க நீர் உதவுகிறது. இந்த எலக்ட்ரோலைட்டுகளை அடிப்படையாக கொண்டே நமது ஆற்றலின் அளவு தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நீங்கள் அதிகமாக தண்ணீர் குடிப்பதன் மூலம் எலக்ட்ரோலைட்டுகளின் சமநிலையில் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் உங்களுக்கு சோர்வும் மயக்கமும் நேரிட கூடும்.
எப்போதும் உங்கள் உடலில் நீரேற்றத்தின் அளவை சரிப்பார்க்க வேண்டும். அதற்கு சிறந்த வழி உங்கள் சிறுநீரின் நிறத்தை சரிப்பார்ப்பதே ஆகும். உங்கள் சிறுநீரானது மிகவும் அடர் மஞ்சள் நிறமாக இருந்தால் உங்களுக்கு குறைந்த நீரிழப்பு இருக்கிறது என பொருளாகும்.
ஆனால் வெளிர் மஞ்சள் நிறமாக இருந்தால் உங்கள் நீரேற்ற நிலை சரியாக உள்ளது என பொருளாகும். ஆனால் அதிக நீர் குடிப்பவர்களுக்கு சிறுநீர் தண்ணீர் நிறத்தில் இருக்கும். அவர்களுக்கு அதிக நீரிழப்பு இருப்பதற்கான அறிகுறியாகவே சிறுநீர் நிறமற்று வெளியாகிறது.
அதிகப்படியான நீரிழப்பிற்கு முதல் அறிகுறியே அதிகமாக சிறுநீர் கழிப்பதே ஆகும்.
இரத்தத்தில் சோடியமின் அளவு குறைய இந்த அதிகளவு தண்ணீர் அருந்துவது காரணமாக உள்ளது. சாதரணமாக அதிக உப்பை உணவில் சேர்த்துக்கொண்டால் அதனால் உடலில் வீக்கம் ஏற்பட வாய்ப்புண்டு.













