விவசாயி ஆன கிரிக்கெட் வீரர் தோனி

SOCIAL SHARE
Pin It

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி முழு விவசாயி ஆகவே மாறியுள்ளார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபிறகு தோனி ராஞ்சியில் உள்ள செம்போ கிராமத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் 40 முதல் 50 ஏக்கர் வரையிலான விவசாய நிலத்தில் இயற்கை முறைப்படி, பப்பாளி மற்றும் வாழை உள்ளிட்டவற்றை பயிரிட்டு வளர்த்து வருகிறார். அதுமட்டுமின்றி இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உரத்தின் மூலமே தனது இடத்தில் தோனி விவசாயம் செய்து வருகிறார்.

செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளில் இருக்கும் ஆபத்து குறித்தும், இயற்கை விவசாயத்தின் நன்மை குறித்தும் தோனி அண்மையில் வீடியோ ஒன்றில் விளக்கியிருந்தார். இதேபோல் மற்றொரு வீடியோவில், தோனி இயற்கை முறையில் தர்பூசணி விதைகளை நிலத்தில் ஊன்றும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது.

தோனி தனது பண்ணை வீட்டில் பயிரிட்டிருந்த தக்காளி, முட்டைகோஸ், பீன்ஸ் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளை துபாய்க்கு ஏற்றுமதி செய்வதற்கு ஜார்க்கண்ட் அரசு முன்வந்துள்ளது. வேளாண்மைத்துறை மூலம் இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ARUNACHALAM