சத்தீஸ்கரின் பஸ்தரில் வினோதமான திருமணம் நடைபெற்றது. ஒரு நபர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை ஒரே மண்டபத்தில் திருமணம் செய்து கொண்ட அதிசயம் ஜனவரி 5 ஆம் தேதி நடந்தது. இந்த திருமணத்தில் சுமார் 600 பேர் கலந்து கொண்டனர்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதல் விவகாரம் தொடங்கியது, மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பஸ்தார் மாவட்டத்தின் தொலைதூர கிராமத்தின் விவசாயியும் தொழிலாளியுமான சந்து மெளரியா 21 வயது பழங்குடி பெண் சுந்தரி காஷ்யப்பை காதலித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஒரு வருடம் கழித்து உறவினரின் வீட்டு திருமணத்திற்கு சென்றிருந்தபோது, அங்கு சந்தித்த ஹசீனா மீது சந்துவுக்கு காதல் ஏற்பட்டது.
ஆனால், தனக்கு ஏற்கனவே காதல் இருப்பதை சந்து ஹசீனாவிடம் சொல்லிவிட்டார். ஆனால் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருந்தார் ஹசீனா.
“ஹசீனா மற்றும் சுந்தரி இருவரும் ஒருவருக்கொருவர் தெரிந்துகொண்டு என்னை திருமணம் செய்து ஒன்றாக வாழ ஒப்புக்கொண்டனர். நாங்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்தோம், ஆனால் ஒரு நாள் ஹசீனா என் வீட்டிற்கு வந்துவிட்டார். ஹசீனா இங்கே வந்துவிட்டதை அறிந்த சுந்தரியும் என் வீட்டிற்கே வந்துவிட்டார. நாங்கள் மூவரும் குடும்பமாக ஒன்றாக வாழ ஆரம்பித்துவிட்டோம்” என்று சாந்து கூறுகிறார்.
இரண்டு பெண்களும் தன்னை நேசிக்கிறார்கள் என்றும் யாரையும் விட்டுவிட முடியாது என்றும் சந்து சொல்கிறார். பெண்கள் இருவரும் அவருடன் ஒன்றாக வாழ ஒப்புக்கொண்டனர்.













