பிரதான் மந்திரி வய வந்தன யோஜனா - முதுமையில் ஓய்வூதியம்

SOCIAL SHARE
Pin It

முதுமையில் வழக்கமான வருமானம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பென்ஷன் திட்டத்தில் (Pension Scheme) முதலீடு செய்கிறார்கள். ஆனால் சிலர் பணி காரணமாக பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்ய மறந்து விடுகிறார்கள். அவர்களுக்கு முதுமையில் ஓய்வூதியம் கிடைப்பதில்லை. இருப்பினும், அவர்களுக்காக எல்.ஐ.சி ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. 

இந்த திட்டத்தில், நீங்கள் 60 வயதிலும் மொத்த தொகையை முதலீடு செய்யலாம். முதலீடு செய்த, அடுத்த ஆண்டு முதல், மாதாந்திர அடிப்படையில் ஓய்வூதியம் கிடைக்கும். எல்.ஐ.சியின் இந்த திட்டத்தின் பெயர் பிரதான் மந்திரி வய வந்தன யோஜனா (Prime Minister Vaya Vandana). இந்த திட்டம் மத்திய அரசின் மானிய உதவியுடன் செயல்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ்  ஓய்வூதியம் வழங்க எல்ஐசி நிறுவனத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

60 வயதுக்கும் மேற்பட்ட குடிமக்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ. 12,000 வரை ஓய்வூதியம் பெற முடியும்.

இதில் குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையாக மாதத்திற்கு ரூ. 1000 பெறலாம். அதாவது ஒருவர் ரூ. 1.62 லட்சம் வரை முதலீடு செய்ய வேண்டும், அவருக்கு அதிகபட்ச மாத ஓய்வூதியம் ரூ. 9250 வரை கிடைக்கும். அதேநேரத்தில் காலாண்டு ஓய்வூதியம் ரூ. 27,750, அரை ஆண்டு ஓய்வூதியம் ரூ. 55,500 மற்றும் ஆண்டு ஓய்வூதியம் ரூ.1,11,000 இருக்கும்.

ஓய்வூதியம் பெறுபவர் ஒரு நிலையான தேதி, வங்கி கணக்கு மற்றும் ஓய்வூதியத்திற்கான காலத்தை தேர்வு செய்ய வேண்டும். உங்கள் தேவைக்கேற்ப ஓய்வூதியத் தொகையையும் நீங்கள் தீர்மானிக்கலாம். அதாவது நீங்கள் மாதாந்திர, காலாண்டு, அரை ஆண்டு அல்லது ஆண்டு ஓய்வூதியத்தை விரும்பினால் இந்த விருப்பத்தை நீங்கள் தேர்வு செய்யலாம். இந்தத் திட்டத்தை எடுக்கும் முதலீட்டாளர் இறந்துவிட்டால், Purchase Price பரிந்துரைக்கப்பட்டவருக்குத் (Nominee) திருப்பித் தரப்படுகிறது.

இந்தத் திட்டத்தைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு, நேரடியாக எல்ஐசி அலுவலகத்திற்கு சென்றும், எல்ஐசி இணையதளத்திலும் சென்று தெரிந்து கொள்ளலாம்.

ARUNACHALAM