மாஸ்டர் ஒரு பார்வை

SOCIAL SHARE
Pin It
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படம் நேற்று வெளியாகியுள்ளது. தியேட்டரில் விசிலடித்து, ஆரவாரம் செய்து படம் பார்த்து எவ்வளவு நாளாச்சு என ஏக்கத்துடன் காத்திருந்த ரசிகர்களுக்கு, மாஸ்டர் படம் விருந்தாக அமைந்துள்ளது. படத்தின் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கு போடப்பட்டது. அப்போது விஜய்யின் பேனருக்கு பாலாபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும் ரசிகர்கள் ஆராவாரம் செய்தனர். 
 
தற்போது வரை மக்கள் மத்தியில் இருந்தும், திரையுலக பிரபலங்களிடம் இருந்தும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது மாஸ்டர். உலகளவில் பல நாடுகளில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ஆஸ்திரேலியாவில் முதல் நாள் மட்டுமே சுமார் ரூ. 1.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
 
மேலும் நியூசிலாந்து நாட்டில் முதல் நாள் வசூலில் சுமார் ரூ. 30 லட்சம் வரை வசூல் செய்து தென்னிந்தியளவில் வெளிநாட்டில் அதிகம் வசூல் செய்த முதல் தமிழ் திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது.
 
இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகை மாளவிகா மோகனன், நடிகர்கள் சாந்தனு, தீனா, அர்ஜுன் தாஸ், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோர் ரசிகர்களுடன் முதல் காட்சியை கண்டுகளித்தனர்.
 
இப்படத்தை காண திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்களில் திரையரங்கில் சென்றது மட்டுமின்றி மாஸ்டர் படம் குறித்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவா கார்த்திகேயன் சென்னை வெற்றி திரையரங்கில் மாஸ்டர் படத்தை பார்த்துள்ளார்.
 
மாஸ்டர் படத்தின் அதிகாலை காட்சியை சென்னையில், ரசிகர்களுடன் சேர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷும் பார்த்துள்ளார். காரில் மாஸ்டர் படம் பார்க்க தியேட்டருக்கு செல்கிறேன் என அவர் இன்ஸ்டாவில் போட்ட ஸ்டோரி வைரலாகியது.
 
ஒரு வருடத்திற்கு பிறகு, தியேட்டரில் இப்படியொரு படத்தை பார்ப்பது ரொம்பவே எக்ஸைட்டிங்காக இருக்கு, இது மாஸ்டர் பொங்கல் டா என கிரீத்தி சுரேஷ் டுவீட் போட்டுள்ளார்.

ARUNACHALAM