இன்றைய நவீன காலகட்டத்தில் சோலார் ஃபென்சிங் (Solar Fencing) என்பது நவீனமயமாக்கப்பட்ட மற்றும் புதிய மரபை உருவாக்கும் பாதுகாப்பு வழிகளில் முக்கியமானது. சூரியசக்தியில் இயங்கும் வேலி, ஒருவரின் சொத்தை பாதுகாப்பதோடு, புதுப்பிக்கத்தக்க சூரிய சக்தியை பயன்படுத்தி சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் தடுக்கிறது.
மின்சார வேலி போல செயல்படும் Solar Fencing, மனிதர்களோ விலங்குகளோ (Animals) வேலியுடன் தொடர்பு கொள்ளும்போது கடுமையான அதிர்ச்சியை அளிக்கிறது. உயிர் இழப்பு ஏதும் ஏற்படாது என்பதை உறுதிசெய்யும் இந்த பாதுகாப்பு வழிமுறை, திருட்டு மற்றும் அத்துமீறலைத் தடுத்து பாதுகாப்பை அதிகரிக்கிறது.
- செலவு குறைவு, மலிவானது
- குறைந்த பராமரிப்பு செலவு
- சிறந்த பாதுகாப்பு, மிகவும் நம்பகமானது
- மனிதர்களுக்கோ அல்லது விலங்குகளுக்கோ எந்தவிதமான உடல் ரீதியான தீங்கும் ஏற்படாது
- புதுப்பிக்கத்தக்க சூரிய சக்தியைப் பயன்படுத்துகிறது
- மையப்படுத்தப்பட்ட அலாரம் அமைப்புடன் வருகிறது
- தேசிய மற்றும் சர்வதேச பாதுகாப்புத் தரங்களை பூர்த்தி செய்கிறது
- மின்சாரத்தை கட்டுப்படுத்தும் அலகு (CCU)
- மின் ஆற்றல்
- வேலியில் மின்னழுத்த அலாரம் (FVAL)
- ஒளி மின்னழுத்தத் தொகுதி
- சூரியசக்தியினால் இயங்ககூடிய மின் வேலிகள் அமைக்க, விவசாயிகளுக்கு தமிழக அரசு மானியம் வழங்குகிறது. இதற்காக 2020 – 2021 நிதியாண்டில் 3 கோடி ரூபாய் மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது.
சூரிய சக்தியினால் இயங்கக்கூடிய சோலார் ஃபென்சிங் (Solar Fencing) அமைக்க தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 50 சதவிகித மானியம் கிடைக்கும்.













