மலேசியாவை சேர்ந்த பெற்றோர் கடந்த 2015ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுப் பிரிந்தனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருந்துள்ளது. 2016ஆம் ஆண்டு கணவரிடம் விவகாரத்து பெற்ற பெண் வேறு ஒரு நபரை திருமணம் செய்துள்ளார்.
ஆனால் அந்த நபர் வேலையின்றி வீட்டில் இருந்து உள்ளார். தனது 12 வயது வளர்ப்பு மகளைக் கடந்த 2018, ஜனவரி 5ஆம் தேதி தொடங்கி 2020 பிப்ரவரி 24ஆம் தேதி வரை 105 முறை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி உள்ளார். வீட்டில் யாரும் இல்லாத சமயங்களில் எல்லாம் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இது குறித்து வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என அந்தச் சிறுமியை மிரட்டியும் அடித்தும் உள்ளார் .
இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியையும் அவளது தங்கையையும் சிறுமியின் தாய் அத்தை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார் . அப்போது தனக்கு இழைக்கப்பட்ட கொடுமையை அந்தச் சிறுமி தெரியப்படுத்தியதை இந்த சம்பவம் சத்துக்கு வந்து உள்ளது.
இது குறித்து தாயார் போலீசில் புகார் அளித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவருக்கு கடுங்காவல் தண்டனையும் மிக அதிகபட்ச பிரம்படிகளும் வழங்கவேண்டும் என அரசுத்தரப்பில் வாதாடப்பட்டது.
இந்நிலையில், வழக்கு விசாரணை முடிவில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு 1,050 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 24 பிரம்படிகளும் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது.













