கொரோனா தொற்றுநோய் நமது வாழ்வை பல வழிகளில் மாற்றி விட்டது. நீண்ட நேரம் வீட்டிலிருந்தபடியே வேலை செய்யும் பலர், உடல் எடை அதிகரித்து அதன் காரணமாக அவதியில் உள்ளனர்.
குறைந்த அளவிலான உடல் செயல்பாடு காரணமாக பலரது செரிமானம் பாதிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் பசியுடன் இருக்கும்போது, வேலை செய்யத் தேவையான கலோரிகள் அல்லது ஆற்றலை உங்களது உடல் நாடுகிறது. பசி, தசைகள் இழப்பை ஏற்படுத்துகிறது, இது முதுகெலும்புக்கு அதிக அழுத்தத்தை அளிக்கிறது. முதுகெலும்பில் அதிகப்படியான அழுத்தம் முதுகுவலியை மேலும் மோசமாக்குகிறது.
வைட்டமின் டி குறைபாடு மிகவும் பொதுவானது. பெரும்பாலும் முதுகுவலிக்கு மிகவும் பொதுவான காரணங்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது. ஆகையால், உங்கள் வைட்டமின் டி அளவை எப்போதும் சோதித்து சரிபார்க்கவும். இது இரத்த பரிசோதனை மூலம் செய்யப்படும்.
தினசரி உணவில் இரண்டு டீஸ்பூன் கருப்பு எள் விதைகளை சேர்க்கவும். வெள்ளை எள் விதைகள் கால்சியம் உறிஞ்சுதலைக் குறைக்கும். கருப்பு எள் விதைகள் உடலில் கால்சியம் உறிஞ்சுதலை மேம்படுத்துவதோடு எலும்புகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
நாள் முழுவதும் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருங்கள். உங்கள் வேலையின் இயல்பு அமர்ந்தபடி செய்வதாக இருந்தால், முதுகு வலி வராமல் இருக்கும் ஒன்று நீங்கள் தரையில் அமர்ந்து வேலை செய்யலாம் அல்லது உங்கள் முதுகுத்தண்டு நேராக இருப்பது போல நாற்காலியில் அமர்ந்து மேஜையில் வேலை செய்யவும்.
நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்தபடி இருக்காமல், அவ்வப்போது வேலை செய்யும் இடத்திலிருந்து எழுந்து காலார நடந்து வந்தால், தசை பிடிப்புகள் இல்லாமல் இருக்கும். உடல் பாகங்களும் இயல்பாக, ஆரோக்கியமாக இருக்கும்.
முதுகுவலிப் பிரச்சனை இருப்பவர்கள் அல்லது அது வருவதற்கு முன்னதாகவே தவிர்க்க நினைப்பவர்கள் கண்டிப்பாக யோகா செய்திடலாம்.
முதுகும் இடுப்பும் இணைகிற இடத்தில் பிடிப்பு வலி போல பிடித்துக் கொள்ளும் அதனை தவிர்க்க இந்த பயிற்சி செய்திடலாம்.
தரையில் இரண்டு கால்முட்டியையும் ஊன்றி உட்கார வேண்டும். நன்றாக மூச்சை இழுத்து விடுங்கள். பாதம் இரண்டும் தரையில் படிந்திருக்க வேண்டும், ஒன்றோடொன்று சேர்ந்து வைப்பது, மேலும் கீழுமாய் வைத்திருப்பது கூடாது. இப்போது கைகளை கைகளை தலைக்கு மேலே தூக்கி அப்படியே உங்களுக்கு முன்னால் தரையில் வைக்க வேண்டும். கைகள், கழுத்து, முதுகு ஆகியவை நேர்கோட்டில் இருக்க வேண்டும்.
தலையிலிருந்து கை சற்று மேலே இருக்க வேண்டும். பின் மேலே அப்படியேஎழுந்து நார்மல் பொசிசனுக்கு வந்து மீண்டும் இதே போல செய்ய வேண்டும். இதை செய்யும் போது வேக வேகமாக செய்யாமல் நிதானமாக ஆழமான மூச்சை இழுத்து விட்டபடி செய்திடுங்கள். இதனை ஒன்றிலிருந்து மூன்று நிமிடங்கள் வரை செய்யலாம்.













