உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 10.52 கோடியைக் கடந்துள்ளது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா, பிரிட்டன் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 130,799,458 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 105,291,823 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 2,850,062 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 22,656,766 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 97,606-க்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள்:
அமெரிக்கா- 31,314,625
பிரேசில்- 12,912,379
இந்தியா- 12,391,129
பிரான்ஸ் - 4,741,759
ரஷ்யா- 4,563,056
பிரிட்டன்- 4,353,668
கொரோனாவால் அதிகம் பேர் உயிரிழந்த நாடுகள்:
அமெரிக்கா-567,610
பிரேசில்- 328,366
மேக்சிகோ- 203,664
இந்தியா- 164,141
பிரிட்டன்- 126,816
இத்தாலி- 110,328
இதனிடையே, அஸ்ட்ரஜெனகா தடுப்பூசி போட்டுக் கொண்ட 7 பேர், ரத்தம் உறைந்து பாதிக்கப்பட்டு பலியாகி இருப்பதாக இங்கிலாந்து அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம், அஸ்ட்ரஜெனகா நிறுவனம் இணைந்து தயாரித்த தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் பயன்பாட்டில் உள்ளது.
இதே போல், அஸ்ட்ரஜெனகாவின் தடுப்பூசி பல நாடுகளிலும் பல்வேறு பெயர்களில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த தடுப்பூசி போட்டவர்களுக்கு ரத்தம் உறைந்து பாதிக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, ஐரோப்பிய யூனியன் நாடுகளும் வேறு பல நாடுகளும் மருந்துக்கு தடை விதித்துள்ளன. ஆனாலும், உலக சுகாதார நிறுவனம் எந்த தடையும் விதிக்கவில்லை. இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தொடர்ந்து அஸ்ட்ரஜெனகா மருந்து பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில், இங்கிலாந்தில் கடந்த 24ம் தேதி வரையிலான கணக்கெடுப்பில் 1 கோடியே 80 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், 30 பேருக்கு ரத்தம் உறைதல் பாதிப்பு ஏற்பட்டதாகவும் அதில் 7 பேர் இறந்துள்ளதாகவும் இங்கிலாந்து அரசு அதிர்ச்சித் தகவலை நேற்று வெளியிட்டுள்ளது.
ஆனாலும், அவர்கள் மரணத்திற்கு தடுப்பூசியால் ஏற்பட்ட பக்கவிளைவுதான் காரணமாக என்பது குறித்து எந்த ஆதாரமும் இல்லை. இதுதொடர்பான ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. ஆனாலும், இந்தியாவைப் பொறுத்த வரையில் இதுவரை கோவிஷீல்டு தடுப்பூசி போட்ட யாருக்கும் ரத்தம் உறைதல் போன்ற பாதிப்புகள் இல்லை என்றே மத்திய அரசு கூறி வருவது குறிப்பிடத்தக்கது.













