தொழில் வாய்ப்புகளைத் தரும் படிப்புகள்

SOCIAL SHARE
Pin It

நிறுவனங்களில் வேலைக்குச் செல்லாமல், முதலீடுகள் பெரிதாக இல்லாமல் வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்க உதவும் படிப்புகள் ஏ

ராளமாக உள்ளன. அவற்றில் சிலவற்றைக் காணலாம்.

அனிமேஷன் & கிராபிக்ஸ்

தொழில்நுட்ப அறிவு, படைப்பாற்றல், புதிதாக சிந்திக்கக் கூடிய திறன், ஆகியவை இருந்தால், கம்ப்யூட்டர் அனிமேஷன் & கிராபிக்ஸ் துறையில் நீங்கள் கலக்கலாம். திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், யுடியூப் சேனல்கள், விளம்பரங்கள், என அனைத்திலும் அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸின் பங்கில்லாமல் எதுவுமே நடக்காது. தனியார் பயிற்சி மையங்களில் பயிற்சிகள் முடித்து இந்தப் பணிகளை மேற்கொள்ளலாம். வீட்டிலேயே இதற்கான தொழில்நுட்பங்களைக் கொண்ட கம்ப்யூட்டரை வைத்து, கிரியேட்டிவ் ஆக நீங்களே சில சாம்பிள் அனிமேஷன்களை உருவாக்கி, ஆன்லைனில் வாடிக்கையாளர்களை அணுகி ஆர்டர்கள் பெறலாம். அனிமேஷன், கிராபிக்ஸில் வித்தைகளை கற்றுக்கொண்டால், நிமிடத்திற்கு ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம்.

வெப் டெவலப்பர் & வெப் டிசைனர்

வலைதளங்களை உருவாக்கி, வடிவமைத்து நிர்வகிப்பது இவர்களது பணி. பொதுவாக வெப் டெவலப்பர் பணிக்கு ஜாவா ஸ்கிரிப்ட், ஜே-கொரி, எச்டிஎம்எல், சிஎஸ்எஸ் போன்ற படிப்புகளை முடிக்கவேண்டும். வெப் டிசைனருக்கு போட்டோஷாப், டிரிம்வியூவர், இன்டிசைன் போன்ற டிசைனிங் துறையில் பயிற்சி இருப்பது அவசியம். தனியார் பயிற்சி மையங்களில் இந்தப் பயிற்சிகளை முடித்து, சோதனை அடிப்படையில் வலைப்பக்கங்கள் உருவாக்கி வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மூலம் அனுப்பி ஆர்டர்கள் எடுக்கலாம். ஆன்லைன் நிறுவனங்களில் இதற்கான வேலைவாய்ப்புகளும் அதிகளவு உள்ளன. குறிப்பாக ஆன்லைன் செய்தி தளங்கள் அதிகளவில் இருப்பதால் வேலைவாய்ப்புகள் உறுதியாக கிடைக்கும்.

மொழிபெயர்ப்பு பணி

காலையில் எழுந்து வேலைக்குச் சென்று அலுத்துப் போய் வீடு திரும்புபவர்களின் ஏக்கம், என்னவோ, அதை அனுபவிப்பவர்கள் மொழிபெயர்ப்பாளர்கள். விரும்பிய நேரத்தில், விரும்பிய இடத்தில் ஃப்ரீலான்சிங் முறையில் மொழிபெயர்ப்பு பணிகளை மேற்கொள்ளலாம். வலைதளங்கள், மொபைல் ஆப், கையேடுகள், புத்தகங்கள் என, மொழிபெயர்ப்பு செய்யக்கூடிய வாய்ப்புகள் அனைத்து துறைகளில் இருந்தும் கிடைக்கும்.

ஆர்டர்களை எங்கே வாங்குவது?

ஆன்லைனில் இதற்கெனவே ஏராளமான ஏஜென்சி வலைதளங்கள் உள்ளன. அவற்றில் பதிவு செய்து கொண்டால் போதும். பொதுவான மொழிபெயர்ப்பு, தொழில்நுட்பம், மார்க்கெடிங், மருத்துவம் என பல துறைகளின் மொழிபெயர்ப்பு வாய்ப்புகள் நமக்கு அனுப்பி வைக்கப்படும். நமக்கேற்ற வாய்ப்புகளை டிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

ஒரு வார்த்தைக்கு இவ்வளவு, ஒரு பக்கத்திற்கு இவ்வளவு என வாடிக்கையாளர்களுக்கு தகுந்த மாதிரி கட்டணம் நிர்ணயிக்கலாம். தொடக்கத்தில் அதிகமாக கட்டணம் கேட்க முடியாது. அனுபவம் கூடக்கூட கட்டணங்களை சந்தைக்கு ஏற்றமாதிரி நிர்ணயம் செய்யலாம். ஆர்டர்கள் தருபவர்கள் முதலில் மாதிரி மொழிபெயர்ப்பை செய்து தரச்சொல்வார்கள். அதற்கு கட்டணம் கிடையாது. அதில் தேர்ச்சி பெற்றால் ஆர்டர்கள் பெறலாம்.

பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை மொழியியல் அல்லது மொழிபெயர்ப்பியல் படிப்புகளை முடித்தால் முன்னுரிமை அளிக்கப்படும்.

சராசரியாக நாள் ஒன்றுக்கு 1000 முதல் 4000 ரூபாய் வரை ஈட்டலாம்.
 

ARUNACHALAM