தமிழக அரசின் உதவித்தொகை திட்டங்கள்

SOCIAL SHARE
Pin It

I. இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித் தொகை

60 வயதிற்கு மேற்பட்டிருக்க வேண்டும்.  பயனாளியின் பெயர், வறுமைக்கோட்டு பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும். 

எவ்வகையிலும் வருமானம் பெற வழியில்லாதிருக்க வேண்டும். 

பயனாளி உழைக்கும் திறன் உள்ளவராக இருக்கக் கூடாது.  பிச்சை எடுப்பதை தொழிலாக கொண்டிருக்க கூடாது.   ரூ.5000/- மதிப்புக்கு மேற்பட்ட சொத்து எதையும் சொந்தமானதாக கொண்டிருத்தல் கூடாது.

2. இந்திராகாந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை

பயனாளியின் வயது 18லிருந்து 59 வயதிற்குள் இருக்க வேண்டும்.  ஊனத்தின் தன்மை 80% க்கு அதிகமாக இருக்க வேண்டும்.  பயனாளியின் பெயர் வறுமைக்கோட்டு பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும்.  எவ்வகையிலும் வருமானம் பெற வழியில்லாதிருக்க வேண்டும்.  பிச்சை எடுப்பதை தொழிலாக கொண்டிருக்க கூடாது.  ரூ.5000/- மதிப்புக்கு மேற்பட்ட சொத்து எதையும் சொந்தமானதாக கொண்டிருத்தல் கூடாது.

3. இந்திராகாந்தி தேசிய விதவை உதவித் தொகை

பயனாளியின் வயது 40லிருந்து 59 வயதிற்குள் இருக்க வேண்டும்.  மறுமணம் செய்திருத்தல் கூடாது. எவ்வகையிலும் வருமானம் பெற வழியில்லாதிருக்க வேண்டும்.  பயனாளியின் பெயர் வறுமைக்கோட்டு பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும்.  ரூ.5000/- மதிப்புக்கு மேற்பட்ட சொத்து எதையும் சொந்தமானதாக கொண்டிருத்தல் கூடாது.

4. ஆதரவற்ற விதவை உதவித் தொகை

பயனாளியின் வயது 18 மற்றும் 18க்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்.  மறுமணம் செய்திருத்தல் கூடாது.  வருமானம் ஏதுமின்றி வயது வந்த மகன்கள் இருந்தாலும் ஓய்வூதியம் வழங்கலாம்.  வருமானம் ஏதுமின்றி வாழ்பவராக இருக்க வேண்டும்.  ரூ.5000/- மதிப்புக்கு மேற்பட்ட சொத்து எதையும் சொந்தமானதாக கொண்டிருத்தல் கூடாது.

5. மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை

பயனாளியின் வயது 18 மற்றும் 18க்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்.  ஊனத்தின் தன்மை 60% க்கு மேல் இருத்தல் வேண்டும்.  வருமானம் இல்லாதவராக இருத்தல் வேண்டும்.  ரூ.5000/- மதிப்புக்கு மேற்பட்ட சொத்து எதையும் சொந்தமானதாக கொண்டிருத்தல் கூடாது. 

6. ஆதரவற்ற விவசாயத் தொழிலாளர் உதவித் தொகை

பயனாளியின் வயது 60 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்.  எவ்வகையிலும் வருமானம் பெற வழியில்லாதிருக்க வேண்டும்.  பிச்சை எடுப்பதை தொழிலாக கொண்டிருக்க கூடாது.  ரூ.5000/- மதிப்புக்கு மேற்பட்ட சொத்து எதையும் சொந்தமானதாக கொண்டிருத்தல் கூடாது.

7. கணவனால் கைவிடப்பட்ட ஆதரவற்ற மனைவியருக்கான உதவித் தொகை

பயனாளியின் வயது 30 மற்றும் அதற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்.  தமிழ்நாட்டில் நிலையான முகவரியை உள்ளவராக இருத்தல் வேண்டும்.  முறையான திருமணம் ஆனவராக இருத்தல் வேண்டும்.  குறைந்தது 5 வருடங்கள் பிரிந்து வாழ்பவராக இருத்தல் வேண்டும்.  எவ்வகையிலும் வருமானம் பெற வழியில்லாதிருக்க வேண்டும்.  ரூ.5000/- மதிப்புக்கு மேற்பட்டட சொத்து எதையும் சொந்தமானதாக கொண்டிருத்தல் கூடாது.

8. திருமணமாகாத ஏழை மகளிர் உதவித் தொகை

பயனாளி 50 வயதை நிறைவு செய்து திருமணமாகாத பெண்ணாக இருத்தல் வேண்டும்.  எவ்வித வருமானமோ அல்லது பிழைப்பூதியத்திற்கான ஆதரவு வழியோ பெற்றிருத்தல் கூடாது.  பிச்சை எடுப்பதை தொழிலாக கொண்டிருக்க கூடாது.  ரூ.5000/- மதிப்புக்கு மேற்பட்ட சொத்து எதையும் சொந்தமானதாக கொண்டிருத்தல் கூடாது. 

9. இலங்கை அகதிகளுக்கான சிறப்புத் திட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மற்றும் எட்டையபுரம் வட்டங்களில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்கும் தமிழக அரசால்  முதியோர் உதவித் தொகை, விதவை உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் உதவித் தொகை வழங்க நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

10. முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்

இத்திட்டத்தின் கீழ், கீழ்க்கண்ட ஐந்து வழிகளில் நிதி உதவிகள் செய்ய வழிவகை உள்ளன. 
உறுப்பினர்களின் திருமணம்
உறுப்பினர்களின் குழந்தைகள் திருமணம்
முதியோர் உதவித் தொகை
இயற்கை மரணம் – ஈமச்சடங்கிற்கான நிதியுதவி
விபத்து மரணம் – ஈமச்சடங்கிற்கான நிதியுதவி
கல்வி உதவித் தொகை

ARUNACHALAM