சென்னை - யூனியன் பிரதேசம் ஆகிறதா?

SOCIAL SHARE
Pin It

''சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களை, யூனியன் பிரதேசமாக அறிவிக்கும் திட்டம், மத்திய அரசுக்கு இல்லை,'' என, மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்தார்.

அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக, ஜம்மு - காஷ்மீரை, யூனியன் பிரதேசமாக மத்திய அரசு அறிவித்தது. இது வெறும் துவக்கம் தான். வரும் காலங்களில், சென்னை, ஐதராபாத், மும்பை, ஆமதாபாத், பெங்களூரு போன்ற நகரங்களை, யூனியன் பிரதேசமாக அறிவிக்கும் திட்டம், மத்திய அரசுக்கு உள்ளது என, ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சித் தலைவரும், ஐதராபாத் எம்.பி.,யுமான, அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.

இது குறித்து, மத்திய உள்துறை இணை அமைச்சரும், செகந்திராபாதைச் சேர்ந்த, பா.ஜ., - எம்.பி.,யுமான கிஷன் ரெட்டி, கூறியதாவது: மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, ஏ.ஐ.எம்.ஐ.எம்., ஆகிய கட்சிகள், மத்திய அரசுக்கு எதிராக, பொய்யான குற்றச்சாட்டுகளை தொடர்ச்சியாக கூறி வருகின்றன. லோக்சபாவில் ஓவைசி கூறிய குற்றச்சாட்டுக்கு, மத்திய அரசு பதில் அளிப்பதற்கு முன்னதாகவே, அவர் சபையை விட்டு வெளியேறினார். ஐதராபாத், சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களின் வளர்ச்சிக்காக, மத்திய அரசு பல திட்டங்களை வகுத்து வருகிறது. இந்த நகரங்களை, யூனியன் பிரதேசமாக அறிவிக்கும் எந்த திட்டமும் இல்லை என அவர் கூறினார்.

ARUNACHALAM