2021 ஆண்டிற்கான ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பழைய வீரர்கள் சிலரை வெளியேற்றிவிட்டு, பல புதுமுகங்களை சேர்க்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
ஐ.பி.எல். ஏலத்தில் மிகப்பெரிய ஏலதாரர்களில் ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. சிறந்த வீரர்களாக இருந்தாலும், சில பழைய வீரர்களை விடுவித்துள்ளனர்.
எம்.எஸ். தோனி மற்றும் அவரது துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா ஆகியோர் அணியிலேயே தொடர்கின்றனர். கேதார் ஜாதவ், பியூஷ் சாவ்லா மற்றும் ஹர்பஜன் சிங் போன்றவர்களின் சேவை தங்களுக்கு தேவையில்லை என அணி முடிவு செய்துவிட்டது. ஷேன் வாட்சன் (Shane Watson) ஓய்வு அறிவித்திருப்பதால், மற்றொரு வீரருக்கு வாய்ப்பு உள்ளது.
தற்போது அணியில் உள்ள வீரர்கள்: எம்.எஸ்.தோனி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, என் ஜெகதீசன், ஃபாஃப் டு பிளெசிஸ் (Faf Du Plessis), ருதுராஜ் கெய்க்வாட், சாம் குர்ரான், ரவி ஜடேஜா, டுவைன் பிராவோ, மிட்செல் சாண்ட்னர், ஜோஷ் ஹஸ்லவுட், ஷார்துல் தாகூர், கர்ன் ஷர்மா, கே.எம். ஆசிப், இம்ரான் தாஹிர், தீபக் சாஹர், லுங்கி என்ஜிடி.
கர்நாடக வீரர் K கெளதமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ. 9.25 கோடிக்கு எடுத்துள்ளது. கேரள அணி வீரர் விஷ்ணு வினோத்யை டெல்லி கேபிடல்ஸ் அணி ரூ.20 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது குறிப்பிடத்தக்கது
ஐபிஎல் ஏலத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவை சன் ரைடர்ஸ் ஹைதராபாத் அணி ரூ.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இதனைபோல், இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கை கொல்கத்தா அணி ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலிய வீரர் ரிலே மெரிடித்தை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.8 கோடிக்கு எடுத்துள்ளது. சேதன் சாகரியாவை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ரூ.1.2 கோடிக்கு ஏலம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய வீரர் டேனியல் கிறிஸ்டியனை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்கரூரு அணி ரூ.4.80 கோடிக்கு இதனைபோல், இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டனை ராஜஸ்தான் ராயல் அணி ரூ.75 லட்சத்திற்கு ஏலம் எடுத்துள்ளது.













