செல்போன் போதை

SOCIAL SHARE
Pin It

‘இதர போதை பொருட்கள் போல், செல்போன் போதையும் நமக்கு கேட்டை விளைவிக்கும். நேரம் காலமில்லாமல் செல்போனில் மூழ்கிக் கிடந்தால் உடல், மன நலன் கட்டாயம் பாதிக்கும்’.

நாம் செல்போன் போதைக்கு அடிமையாகி வருகிறோம் என்பதற்கான அறிகுறிகள்.....

*அலுவலகத்தில் அல்லது வீட்டில் உள்ள வேலைகளை முடிப்பதில் சிக்கல்
*குடும்பத்தினர், நண்பர்களிடமிருந்து விலகி இருப்பது
*மற்றவர்களுக்கு தெரியாமல் செல்போனை பயன்படுத்துவது
*செல்போன் காணாமல் போய்விடுமோ என்ற பயம்
*செல்போனை வீட்டிலேயே விட்டுவிட்டு வரும் போது பயம், பதட்டம் ஏற்படுவது அல்லது பீதி போன்ற உணர்வு
*ஓய்வில்லாத பதட்டமான மனநிலை
*கோபம் அல்லது எரிச்சல்
*தூக்கப் பிரச்னைகள்
*செல்போனுக்காக ஏங்கி தவிப்பது.

இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் படிப்படியாக செல்போன் பயன்பாட்டை குறைக்க பாருங்கள். புத்தகம் படிப்பது, அலுவலக, வீட்டு வேலைகளில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளலாம். நண்பர்களுடன், உறவினர்களுடன் நேரடியாக பேசி மகிழலாம். தோட்டம் அமைக்கலாம். வீட்டை அழகு படுத்தலாம். அப்படி முடியாவிட்டால் நீங்களும் மனநல மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.

ஒருவர் எந்த விஷயத்திற்காக அதிக நேரம் செலவிட ஆரம்பிக்கிறாரோ,  அதில் அவருக்கு ஈடுபாடு அதிகம் என்று தெரிந்துகொள்ளலாம். அந்த விஷயத்தில் மட்டுமே அவர் கவனம் செலுத்த தொடங்குகிறார் என்றால் அந்த விஷயத்திற்கு அவர் அடிமையாக தொடங்குகிறார் என்று அர்த்தம். அந்த விஷயத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் தருகிறார், அதில் மட்டுமே ஆர்வம் காட்டுகிறார் என்றால் அதில் போதையாகி அவர் அடிமையாகி விட்டார் என்று அர்த்தம்.

வீட்டில் இருக்கும் எல்லோரும் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே செல்போனை பயன்படுத்த வேண்டும். மற்ற நேரங்களில் செல்போனை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். ஆன்லைன் வகுப்புகள் இருக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் செல்போனை பயன்படுத்தும் பழக்கத்தை படிப்படியாக குறைக்க வைக்க வேண்டும்.

 

ARUNACHALAM