கொரோனாவால் 2020 ஏப்ரல் - டிசம்பர் காலகட்டத்தில் வேலையிழந்த 71 லட்சம் ேபரின் ‘பிஎஃப்’ கணக்கு மூடப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் ஊரடங்கை தொடர்ந்து 2020 மார்ச் மாதத்தில் இருந்து இபிஎஃப் (ஊழியரின் வருங்கால வைப்பு நிதி) நிறுவனத்திடமிருந்து பணத்தை எடுக்க சில விதிகள் தளர்வு செய்யப்பட்டன.
அதன்படி வருங்கால வைப்பு நிதி அமைப்பில் இணைந்துள்ள ஊழியர்களில், கடந்த 2020 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 71,01,929 பேரின் பிஎஃப் கணக்குகள் மூடப்பட்டன. அதே 2019ம் ஆண்டில் 66,66,563 பேரின் கணக்குகள் மூடப்பட்டன.
கிட்டதிட்ட 8 மாத இடைவெளியில் கொரோனா காலத்தில் பிஎஃப் கணக்குகள் அதிகளவில் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக 2020ல் அக்டோபர் மாதத்தில் 11,18,751 பேரின் பிஎஃப் கணக்குகள் மூடப்பட்டன. அதே செப்டம்பர் மாதத்தில் 11,18,517 பேரின் பிஎஃப் கணக்குகள் மூடப்பட்டன.
கடந்தாண்டு ஏப்ரல் - டிசம்பர் மாதங்களில் கணக்கில் உள்ள பணத்தை திரும்பப் பெறுதல் எண்ணிக்கையை கணக்கிட்டால், பி.எஃப் கணக்குகளில் இருந்து ரூ.73,498 கோடி திரும்பப் பெறப்பட்டது. 2019ம் ஆண்டில், ரூ.55,125 கோடியாக இருந்தது.













