ஒளிந்து கொண்டு உணவு சாப்பிட்ட ரோஹித்!

SOCIAL SHARE
Pin It

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டுவென்டி– 20 போட்டியில், இந்திய அணியின் துணை கேப்டர் ரோஹித் சர்மா, இந்திய அணியின் உதவியாளர் ஒருவர் பின் அமர்ந்து, மறைத்து வைத்து உணவு சாப்பிடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டுவென்டி – 20 கிரிக்கெட் தொடர் ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் நடந்து வருகிறது. இதன் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற, இரண்டாவது போட்டியில் பதிலடி தந்த இந்திய அணி, வெற்றி பெற்று தொடரை 1–1 என சமன் செய்திருக்கிறது.

இந்த தொடர் 50 சதவீத பார்வையாளர்களுடன் நடந்து வந்த நிலையில், அடுத்த போட்டியில் இருந்து பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. ஆமதாபாத்தில் கொரோனா பரவல் திடீரென அதிகரித்திருப்பதால், பிசிசிஐ இந்த முடிவை எடுத்திருக்கிறது.

இந்நிலையில், இரண்டாவது டுவென்டி – 20 போட்டியில், இந்திய அணியின் துணை உதவியாளர் ஒருவரின் பின்னால், ரோஹித் சர்மா மறைந்து கொண்டு உணவு சாப்பிடும் வீடியோ வெளியாகி வைரலாகி உள்ளது.

ARUNACHALAM