லாக்டவுன் ஓராண்டு : டிவிட்டரில் டிரெண்டிங்

SOCIAL SHARE
Pin It

இந்தியாவில் கடந்தாண்டு கொரோனா வேகமாக பரவிய சமயத்தில் மார்ச் 22 முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதைப்பற்றி பலரும் நினைவுக்கூர்ந்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டு வருவதால் இந்த விஷயம் டிரெண்ட் ஆனது.

நோய் பரவுவதை தடுக்க கடந்தாண்டு மார்ச்சில் தேசிய அளவிலான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. முதல் ஊரடங்கு கடந்த மார்ச் 22ம் தேதியான இன்று தேசிய அளவில் பிறப்பிக்கப்பட்டது. மேலும் அன்றைய தினம் கொரோனாவை எதிர்த்து போராடும் முன்கள பணியாளர்களை ஊக்குவிக்க கைதட்டி ஊக்கப்படுத்தும்படி பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். இந்தியா முழுக்க மக்கள் அதை செய்தனர். தொடர்ந்து கொரோனாவின் தாக்கம் மெல்ல உயர்ந்து சில மாதங்கள் நாடு முழுக்க ஊரடங்கு பிறபிக்கப்பட்டது, பின் படிப்படியாக அவை தளர்த்தப்பட்டது அனைவரும் அறிந்ததே.

தற்போது மீண்டும் ஓராண்டுக்கு பின் கொரோனாவின் தாக்கம் அதிகமாகி வருகிறது. கடந்தாண்டு இதேநாளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட தினத்தை டுவிட்டரில் பலரும் நினைவுக்கூர்ந்து டிரெண்ட் செய்கின்றனர். அந்தவகையில் டுவிட்டரில் #JanataCurfew, #Lockdown ஆகிய ஹேஷ்டாக் தேசிய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது.

* தேசிய ஊரடங்கின் முதலாண்டு நாள் இன்று. கொரோனாவிற்கு எதிரான போரில் வெற்றி பெற 21 நாள் ஆகும் என பிரதமர் மோடி சொன்னார். ஆனால் ஓராண்டு ஆகிவிட்டது. 1.6 லட்சம் பேர் இறந்துள்ளனர். 12.2 கோடி பேர் வேலையிழந்துள்ளனர். லட்சக்கணக்கான தொழில்கள் மூடப்பட்டுள்ளது.

* கொரோனாவை எதிர்த்து போராடும் அனைத்து சுகாதார பணியாளர்கள், அவசரகால உதவிக்காக பணிபுரியும் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் சல்யூட்.

பொதுவாக பலரும் இந்தக் காலக்கட்டத்தில் தாங்கள் என்ன மாதிரியான சூழ்நிலைகளை சந்தித்தோம், எப்படி அன்றைய தினம் கடந்தது என்பதை தங்களது கருத்துக்களாக பதிவிட்டு வருகின்றனர்.

ARUNACHALAM