ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3

SOCIAL SHARE
Pin It

கடந்த செப்டம்பர் மாதம் ஆப்பிள் ஐபோன் 8 மாடலுடன் வெளிவந்த ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 வாடிக்கையாளர்களின் நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.

இந்த ஜிபிஎஸ் மற்றும் செல்லுலார் வசதி கொண்ட இந்த வாட்ச் சீரியசை இந்தியாவில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் அறிமுகம் செய்யவுள்ளன.

இந்த இரு நிறுவனங்களும் தனித்தனியே வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை உறுதி செய்துள்ளன. அடுத்த மாதம் வெளியாகவுள்ள இந்த ஆப்பிள் வாட்ச் சீரியஸ் செல்லுலார் உபகரணம், வரும் மே 4ஆம் தேதி முதல் முன்பதிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வாட்ச்களை ஜியோ.காம், ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்கள் மற்றும் ஏர்டெல் இணையதளங்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மேற்கண்ட ஸ்டோர்களில் இந்த வாட்ச் சீரிஸ் வரும் மே 11 முதல் விற்பனை செய்யப்படும்.

கடந்த ஆண்டு இந்தியாவில் வெளியான ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 ஜிபிஎஸ் மட்டும் உள்ளவையாக இருந்தது.

இந்த நிலையில் இந்த செல்லுலார் வெர்ஷன் ஜிபிஎஸ் வாட்ச் விலை குறித்த சரியான தகவல் வெளிவரவில்லை, இருப்பினும் இதன் ஸ்போர்ட் பேண்ட் விலை ரூல்32380 என்றும் இதன் நைக்+ பேண்ட் ரூ.32470 ஆக விற்பனை செய்யப்படவுள்ளது.

இந்த நிலையில் இந்த புதிய உபகரணம் குறித்த விலை இன்னும் குறிப்பிடப்படவில்லை.

இந்த ஆப்பிள் வாட்ச் சீரீஸ் 3 ஜிபிஎஸ் மற்றும் செல்லுலார் டிவைசில் எம்பெடட் சிம் உள்ளது இந்த சிம் உங்களுக்கு ஐபோன் இருந்தால் அதே மொபைல் எண்ணிலும் பயன்படுத்தி கொள்ளலாம்.

மேலும் ஜியோ நிறுவனம் இந்த வாட்சை வாங்குபவர்களுக்கு பிரிபெய்டு ஆக இருந்தாலும் போஸ்ட்பெய்ட் ஆக இருந்தாலும் எந்தவித கட்டணமும் கூடுதலாக வசூல் செய்வதில்லை.

மேலும் ஐபோன் மற்றும் ஆப்பிள் வாட்ச் இரண்டையும் ஒரே டேரிஃபில் பெற்று கொள்ளலாம்.

மேலும் ஏர்டெல் பயனாளிகள் இந்த வாட்சை பயன்படுத்துவதற்கு வாட்ச் செயலியை ஓப்பன் செய்தாலே போதும். அவர்களுடைய ஏர்டெல் எண் மூலமே இதனை பயன்படுத்தி கொள்ளலாம்.

ஆனால் அதே நேரத்தில் ஏர்டெல் போ|ஸ்ட் பெய்ட் பயனாளிகளுக்கு மட்டுமே இது உதவும். ஒரே போஸ்ட்பெய்ட் பிளான் மூலம் ஐபோன் மற்றும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் மூலம் பயன்படுத்தி கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Karisalmedia Admin