தொழில்நுட்பத்தால் உண்டாகும் தாக்கங்கள்

SOCIAL SHARE
Pin It

1. ஆழமான கற்றல் (Deep learning (DL))என்பதன் அடிப்படையில் உருவப்படம் , கானொளிபடம் ,ஒலி, போன்ற குறிப்பிட்ட வரையறைகளுக்கு அப்பாற்பட்ட தரவுகளை கையாளுவதற்காக அமோசான் நிறுவனமானது தன்னுடைய வரைகலை செயலாக்க பிரிவையும்[GPUs],கூகுளானது டென்ஸர் செயலாக்க பிரிவையும் [TPUs]மைக்ரோ சாப்ட்டானது புலநிரல்தொடர்தடுப்பு அணியையும் [FPGAs] செயல்படுத்திடுகின்றன.

2. மின்பணம் (Digital currencies)இந்த வகையின்கீழ் பிட்காயின், ஈதரரம், லிட்காயின் போன்ற காகித பணத்திற்கு பதிலாக மின்பணபரிவர்த்தனை தற்போது நாம் பயன்படுத்ததயாராக இருக்கின்றன.

3. Blockchain டிஜிட்டல் கரன்சி எனும் மின்பணபரிமாற்றத்தினை கையாளுவதற்காக இந்த பளாக்செயின் என்பது மிகமுக்கிய பங்காற்றவிருக்கின்றது.

4. தொழிலக பொருட்களுக்கானஇணையம் (Industrial IoT) என்பது தொழிலகங்களில் இயந்திரங்களையும் உற்பத்தி செய்யபடும் பொருட்களையும் தானியங்கியாக கையாளுவதற்கு இந்த தொழில்நுட்பம் மிகமுக்கிய பங்காற்றவிருக்கின்றது.

5. இயந்திரமனிதன் (Robotics) ஆய்வகங்களில் உதவியாளராகவும் ஆபத்தான தொழிலகங்களில் பணியாளராகவும் நிறுவனங்களின் வரவேற்பாளராகவும் இந்த இயந்திரமனிதன் மிகமுக்கிய இடத்தை வகிக்க விருக்கின்றது.

6. தொழிலகங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை நுகர்வோர்களுக்கு கொண்டு செல்லும் பொருட்களுக்கான போக்குவரத்தை கையாளுவதற்காக இயந்திர கற்றல் /ஆழமான கற்றல்(விலி/ஞிலி)என்பது மிகவும் அத்தியாவசிய தேவையாக விளங்க போகின்றன.

7. Assisted reality / virtual reality (AR/VR)புதிய கண்டுபிடிப்புகளை எவ்வாறெல்லாம் பயன்படுத்திடமுடியும் என பரிசோதித்துஅறிந்து கொள்வதற்காக இவை பெரிதும் உதவவிருக்கின்றன.

8 மூர் விதி தற்போது முடிவிற்கு வந்துவிட்டது அதனை தொடர்ந்து முப்பரிமானத்திற்கு செல்ல தயாரான நிலையில் முப்பரிமானஅச்சுபொறி (3Dprinter) போன்றவை நம்முடைய பயன்பாட்டிற்கு வரவிருக்ககின்றன.

9. தற்போது எங்கும் எதிலும் இணையம் எனும் போது அதற்கான பாதுகாப்பு மிகமுக்கியமான தேவையாகும் அதேபோன்று மேலே கூறிய பல்வேறு புதிய தொழில் நுட்பங்களினால் ஏற்படும் பாதகங்களை களைவதற்காக Cyber security எனும் கருத்தமைவு நடைமுறை படுத்தவிருக்கின்றன.

10. அடுத்ததாக ஸ்மார்ட்சிட்டி கிளவுடிஃபிகேஸன் போன்றவைகூட நாம் பயன்படுத்த தயாராக விருக்கின்றன என்ற செய்தியையும் மனதில் கொள்க.

Karisalmedia Admin