தற்போதைய நாகரிக வளர்ச்சியினால் உருவாகும் பேரளவு தரவுகளை வழக்கமான பயன்பாடுகளை கொண்டு நம்மால் கையாளமுடியாது அதாவது தரவுகளை கொண்டுவந்து சேர்த்தல் ,தரவுகளை சேமித்துவைத்தல், தரவுகளை ஆய்வுசெய்தல் , தரவுகளை தேடிபிடித்தல் , தரவுகளை பகிர்ந்து கொள்ளுதல், தரவுகளை காட்சி படுத்துதல் தரவுகளுக்குள் வினாஎழுப்பி பதில் பெறுதல், தரவுகளை இடமாற்றம் செய்தல், தரவுகளை நிகழ்நிலை படுத்துதல் ஆகிய பல்வேறு பணிகளை நம்முடைய வழக்கமான பயன்பாட்டினை கொண்டு கண்டிப்பாக கையாளமுடியாது என்ற நிலையுள்ளது.
அதனால் இவ்வாறான நிலையில் பேரளவு தரவுகளை இவ்வாறான செயலுடன் கையாளுவதற்காகவே பேரளவுதரவுகளை கையாளும் பல்வேறு வரைச்சட்டங்கள் தற்போது புழக்கத்தில் உள்ளன அவைகளுள் ஐந்துவரைச்சட்டங்களிற்கு மட்டிற்குமான ஒரு ஒப்பீடு பின்வருமாறு
1 . Apache Hadoopஇந்த வரைச்சட்டமானது பேரளவு தரவுகளை தொகுதியாக மட்டுமே கையாளகூடியதாகும் மேலும் அவைகளை தேக்கி வைத்திடும் அமைவாக மட்டுமல்லாமல் அவைகளுக்கான தரவுதளமாக வும் விளங்குகின்றது இது தரவுகளை தொடர்ச்சியான சங்கிலி போன்று பயன்படுத்திடுகின்றது இது சி, சி++, ரூபி, குரூவி, பியர்ல், பைத்தான் ஜாவா ஆகிய கணினிமொழிகளை ஆதரிக்கின்றது தரவுகளின் பாதுகாப்பிற்கு Kerberos என்பதை பின்பற்றுகின்றது RAM எனும் தற்காலிக நினைவகம் தனியாக தேவையில்லை அதனால்குறைந்த செலவில் இதனை பயன்படுத்தி கொள்ளலாம்
2. Apache Storm இந்த வரைச்சட்டமானது தொடர்ச்சியான தரவுகளை நேரடியாக நிகழ்வு நேரத்திலேயே கையாளக்கூடியதாகும் இது பயன்படுத்த மிக எளியது அனைத்து கணினி மொழிகளையும் ஆதரிக்ககூடியது இது directed acyclic graph(DAG) வகை தரவுகளாக கையாளக்கூடியது இது செயல்படுவதற்கு அதிகஅளவு RAM எனும் தற்காலிக நினைவகம் தேவையாகும் இதுதரவுகளின் பாதுகாப்பிற்கு YARN என்பதை பின்பற்றுகின்றது.
3 .ApacheSamaza இந்த வரைச் சட்டமானது தொடர்ச்சி யான தரவுகளை கையாளக் கூடியதாகும் இது Apache Kalfkaஎனும் செய்தியமைப்பால்மிகவலுவாக கட்டமைக்கபட்டதாகும் இது செயல்படுவதற்கு அதிகஅளவு RAM எனும் தற்காலிக நினைவகம் தேவையாகும் இது தரவுகளின் பாதுகாப்பிற்கு YARN என்பதை பின்பற்றுகின்றது இது ஜாவா,ஜெவிஎம்,ஸ்கேலா ஆகிய கணினிமொழிகளை ஆதரிக்ககூடியது.
4. Apache Spark இது பொதுநோக்கத்திற்கான குறைந்த நினைவகத்தையே கொண்ட Apache Hadoopäவிட 100மடங்கு விரைவாக செயல்படும் ஒரு பேரளவுதரவுகளை கையாளும் வரைச்சட்டமாகும்
இது பேரளவு தரவுகளை தொகுதியாக கையாளுவதன் அடுத்த தலைமுறையை சேர்ந்ததாகும் Þ¶directed acyclic graph(DAG) வகை தரவுகளை கையாளக்கூடியது இது செயல்படுவதற்கு அதிகஅளவு ஸிகிவி எனும் தற்காலிக நினைவகம் தேவையாகும் .
தரவுகளின் பாதுகாப்பிற்கு கடவுச் சொற்களை பயன்படுத்திடுகின்றது இது ஜாவா, ஆர், பைத்தான், ஸ்கேலா ஆகிய கணினி மொழிகளை ஆதரிக்க கூடியது.
5. Apache Flink இந்த வரைச்சட்டமானது தரவுகளை தொடர்ச்சி யாகவும் தொகுதியாகவும் கையாளக் கூடியதாகும் இது தரவுகளை நேரடியாக ஒவ்வொரு உள்ளீடாக கையாளும் திறன் மிக்கது Þ¶ Apache Hadoop ஆகியவற்றுடன் ஒத்தியங்கும் தன்மைகொண்டது.
இது ஜாவா, ஆர், பைத்தான், ஸ்கேலா ஆகிய கணினிமொழிகளை ஆதரிக்ககூடியது இது செயல்படுவதற்கு அதிகஅளவு தற்காலிக நினைவகம் (RAM) தேவையாகும் தரவுகளின் பாதுகாப்பிற்கு சீகிஸிழி என்பதை பின்பற்றுகின்றது













